Mon ,Mar 04, 2024

சென்செக்ஸ் 73,872.29
66.14sensex(0.09%)
நிஃப்டி22,405.60
27.20sensex(0.12%)
USD
81.57
Exclusive

35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி.. கொலைக்கு உதவிய கூகுள்.. நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்...

Nandhinipriya Ganeshan November 15, 2022 & 15:14 [IST]
35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி.. கொலைக்கு உதவிய கூகுள்.. நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்...Representative Image.

மாநிலங்களை கடந்து நாட்டையே உலுக்கிய சம்பவம் தான் இது. தன்னுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்த காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி, அதை பிரத்யேகமாக வாங்கிய ஃபிரிட்ஜில் 18 நாட்கள் சேமித்து வைத்து தினமும் நாய்களுக்கு வீசி வந்த காதலன். நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைச் சேர்ந்தவர் ஷாரதா வால்கர். 26 வயதான இவர், அதே பகுதியை சேர்ந்த அஃப்தாப் அமீன் (வயது 29) என்ற இளைஞருடன்  2019-ம் ஆண்டு டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து கால் சென்டரில் வேலை செய்ய ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக பூட் பிளாக் என்று தனியாக தொழில் ஆரம்பித்து நடத்தி வந்தனர். இதற்காக இருவரும் அடிக்கடி நாடு முழுவதும் பயணம் செய்தனர். இதில் அவர்களுக்குள் நாளடைவில் காதல் ஏற்பட்டுள்ளது. 

இவர்களின் காதல் விஷயம் ஷாரதாவின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஷாரதாவின் போக்கை கண்டித்து அஃப்தாபுடனான உறவை துண்டித்துவிட்டு வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளனர். ஆனால், பெற்றோர் பேச்சை கேட்காமல் தனது காதலனுடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து, திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்தனர்.

இந்தநிலையில், ஷாரதாவின் பெற்றோர் உறவினர்களுடன் சென்று அஃப்தாபுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்று அங்கு லிவிங் உறவில் இருந்துவந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அமீனிடம் ஷாரதா கேட்டுள்ளார். ஆனால், அஃப்தாப் fling உறவில் இருக்க முயன்று உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

ஷாரதாவின் நச்சரிப்பால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அஃப்தாப் ஷாரதாவை கொலை செய்ய முடிவு செய்து அதற்காக எப்படி இறைச்சி வெட்ட வேண்டும் என்பது குறித்து இரண்டு வாரம் பயிற்சி எடுத்து வந்துள்ளார். பின்னர், கடந்த மே 20-ம் தேதி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு தடயத்தை மறைக்க, கூகுளில் ரத்த கரையை எப்படி கழுவ வேண்டும் என்று பார்த்து அதன் படி ரசாயானங்களை பயன்படுத்தி கழுவியிருக்கிறார். 

பின்னர் ஷாரதாவை 35 துண்டுகளாக வெட்டி அதனை பிரத்யேகமாக வாங்கிய ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துள்ளார். வீட்டில் வாசனை வரக்கூடாது என்பதற்காக அகர்பத்தி பொருத்தி இருக்கிறார். பின்னர், தினமும் இரவில் 2 மணியளவில் பிரிஜில் இருந்து ஒவ்வொரு உடல் பகுதியாக எடுத்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாய்களுக்கு வீசி வந்துள்ளார். 

இவ்வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அங்கித் சவுகான் கூறுகையில், "ஷாரதாவை காணவில்லை என்று அவரின் நெருங்கிய நண்பர் லட்சுமணன் ஷாரதாவின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அவரின் தந்தையும் ஷாரதாவை தொடர்பு கொள்ளவே, ஃபோன் எடுக்காததால், இது குறித்து மும்பை வசாய் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். வசாய் போலீஸார் அப்பெண்ணின் மொபைல் நம்பர் மூலம் அவரை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் ஃபோன் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இப்புகாரை மும்பை போலீஸார் டெல்லி போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர். டெல்லி போலீஸார் உடனே அஃப்தாப்பை பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தியபோதுதான் கொலை செய்யப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. கொலை நடந்து ஆறு மாதமாக இவ்விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்து வந்தது.

கொலை செய்த பிறகு உடல்களை பல பகுதியில் வீசியதால் ஒரு சில எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் அப்பெண்ணின் எலும்புகளா என்று தெரியவில்லை. கொலையை மறைப்பதற்காக அப்பெண்ணின் சமூக வலைத்தள கணக்கில் அஃப்தாப் அடிக்கடி தகவல்களை பதிவிட்டு வந்துள்ளார். அதோடு அப்பெண்ணின் கிரெடிட் கார்டு பில்களையும் கட்டி இருக்கிறார். திருமண நெருக்கடி, இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த சந்தேகம் போன்ற காரணங்களால் இக்கொலை நடந்துள்ளது” என்று கூறப்படுகிறது. 

35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி.. கொலைக்கு உதவிய கூகுள்.. நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்...Representative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்