Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகளுக்கு ரூ.1,000.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!!

Sekar September 02, 2022 & 11:49 [IST]
மாணவிகளுக்கு ரூ.1,000.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!!Representative Image.

தமிழகத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் பேத்திக்கும், திமுக இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பைந்தமிழ்பாரி-கீதா தம்பதியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் எம்எல்ஏ மதியழகன்-விஜயா தம்பதியின் மகன் கவுசிக் தேவுக்கும் கோவை கொடிசியா வளாகத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்றும், கூடிய விரைவில் மற்றவையும் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

அவர் மேலும், " வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு வருகிறார். அப்போது மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை தொடங்கவுள்ளோம். 

மேலும் அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தையும் அன்றைய தினம் தொடங்க போகிறோம். பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை நிதி நிலைமை சரியானவுடன் விரைவில் வழங்கப்படும்." என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்