தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.
மூன்று நாள் பயணமாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள முதல்வர் நேற்று கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதையடுத்து இன்று காலை திருப்பூரில் நடந்த தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு சென்ற முதல்வர் அங்கு கலைஞர் கருணாநிதியின் முழு உருவச் சிலையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
முதல்வர் ஸ்டாலின் தனது உரையில், கலைஞர் மற்றும் பெரியார் இடையேயான உறவு, திமுக ஆட்சிக்கு வந்த வரலாறு மற்றும் அண்ணா குறித்தும், கலைஞர் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.
#LIVE: ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டியில் தமிழினத் தலைவர் கலைஞர் திருவுருவச் சிலைத் திறப்பு விழா https://t.co/EV8UhR2ap0
— M.K.Stalin (@mkstalin) August 25, 2022
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…