Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணி: அனைத்து மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்..!

Baskarans Updated:
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணி: அனைத்து மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்..!Representative Image.

பாட்னா: பீகார் மாநில அரசுப்பணிகளில் பணியாற்ற எல்லா மாநிலத்தவரும் விண்ணப்பிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1.78லட்சம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக பிபிஎஸ்சி எனப்படும் அம்மாநில அரசு தேர்வாணையம் வழியாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக பள்ளி ஆசிரியர்கள் நியமன சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதனிடையே முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமச்சரவைக் கூட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர நாட்டின் எந்த மாநிலத்தில் இருந்தும், தகுதி வாய்ந்த நபர் எல்லோரும்  விண்ணப்பிக்கலாம் என்ற முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பீகார் அமைச்சரவை செயலக கூடுதல் தலைமை செயலர் சித்தார்த் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் முன்பு பீகாரைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் விதிமுறை இருந்தது. தற்போது மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான குடியிருப்பு அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக நம் நாட்டில் உள்ள, எந்தவொரு தகுதி வாய்ந்த குடிமகனும், அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இதற்கு விண்ணப்பதாரர் பீகார் மாநிலத்தில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தாண்டு இறுதிக்கும் ஆசிரியர் நியமனம் முடிவடையும் என்றார்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்