Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Joker Malware: உஷாரய்யா உஷாரு...இந்த 3 மொபைல் ஆப் உங்க போன்ல இருக்கா...உடனே டெலிட் பண்ணுங்க..!

madhankumar May 19, 2022 & 12:56 [IST]
Joker Malware: உஷாரய்யா உஷாரு...இந்த 3 மொபைல் ஆப் உங்க போன்ல இருக்கா...உடனே டெலிட் பண்ணுங்க..!Representative Image.

தற்போது கூகுள் நிறுவனத்திற்கே பெரும் தலைவலியை தரும் "ஜோக்கர்' எனும் வைரஸ் செல்போன் செயலிகள் பரவி வருகிறது. அந்த செயலிகளை கண்டுபிடித்து பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது.

இந்த ஜோக்கர் வைரஸால் பாதிக்கப்பட்ட செயலியை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது அது மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது. பயனாளர்களின் தரவுகளை இதன் மூலம் திருடி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் அந்த வைரஸின் மூலம் செல்போன்களை செயலிழக்க வைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்த வைரஸாக இது பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இந்த ஜோக்கர் வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று செயலிகைளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் செல்போனில் இருந்தால் மால்வேர் தாக்கப்பட்டு உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாமென கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குறிப்பாக போனில் உள்ள பண பரிவர்த்தனை செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

அந்த செயலிகள் பெயர்கள் என்ன?

Style Message, Blood Pressure App, Camera PDF Scanner (ஸ்டைல் மெசேஜ், ப்ளட் பிரஷர் ஆப், கேமரா பிடிஎப் ஸ்கேனர்) ஆகியவை ஆகும். இந்த மூண்டு செயலிகளும் தற்போது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இன் இந்த செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் உடனே டெலிட் செய்யும்படி கூகுள் அறிவுறுத்தியுள்ளது. 

ஜோக்கர் வைரஸ் குறித்து ஒரு பார்வை:

இந்த ஜோக்கர் வைரஸானது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த ஜோக்கர் வைரஸுடன் நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகிறோம் என கூகுள் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்த ஜோக்கர் வைரஸானது உங்கள் போனில் இருந்தால் அதன் மூலம் உங்கள் போனை ஹேக் செய்து உங்கள் Mobile info, உங்கள் போனில் உள்ள மெசேஜ்கள், பணப்பரிவர்த்தனை ஆபகள், முக்கியமான OTP எண்கள் ஆகியவற்றை திருடிவிடுவார்கள் என கூறியுள்ளது. மேலும் இந்த ஜோக்கர் வைரசைக்கண்டு கூகுள் நிறுவனமே பயந்துபோய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் color message என்ற 5 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலில் இந்த ஜோக்கர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கூகுள் அந்த செயலியை நீக்கியது. எனவே தேவையில்லாத அவசியமற்ற ஆப்-களை உங்களது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்