Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New WhatsApp Update News: யாருக்கும் தெரியாமல் Group-ல் இருந்து நைசாக நழுவும் WhatsApp அப்டேட்!

Priyanka Hochumin May 18, 2022 & 20:00 [IST]
New WhatsApp Update News: யாருக்கும் தெரியாமல் Group-ல் இருந்து நைசாக நழுவும் WhatsApp அப்டேட்!Representative Image.

New Whatsapp Update News: நீங்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் அம்சம் வரப்போகிறது தெரியுமா?

மக்கள் தங்களின் முக்கிய தகவல்களை இன்ஸ்டன்ட் மெசேஜ் மூலம் அனுப்புவதற்கு உதவும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அது மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் வகையில் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது கிடைத்த தகவல் படி, தனி நபர் வாட்ஸ்அப் குழுவில் இருந்து மற்ற பயனர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வகையில் அடுத்த அப்டேட்டை (New Whatsapp Update Today) சோதனை செய்யவதாக கூறப்படுகிறது. இது எத்தனை லட்சம் பயனர்களுக்கு பேரானந்தத்தை அளித்திருக்கும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இதுவரை ஒரு குழுவில் இருந்து வெளியேறினால், வாட்ஸ்அப் தானாகவே அந்த நபரின் பெயரை ஹைலைட் செய்து அந்த குரூப் இல் தெரிவிக்கும். இதனால் அவர்களுக்குள் ஒரு சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. 

இப்படி பல சிக்கல் இருந்த நிலையில், இந்த அப்டேட் (Whatsapp New Update Today) அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக அமைத்துள்ளது. மேலும் பயனர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளது. பயனர் ஒரு குழுவில் இருந்து வெளியேறினால், அந்த செய்தி பயனர் மற்றும் குழு நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியப்படும் என்று வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் எப்பொழுது அனைவரும் பயன்படுத்த முடியும் என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு வெர்ஸனுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய ஆவணங்களை உங்களுக்கு தெரியாமல் எடுக்கும் Apps!

இதுவரை வெளிவந்த அப்டேட்கள் 

  • முன்னதாக ஒரு குழுவில் 256 நபர்கள் மட்டுமே சேர முடியும். ஆனால் சமீபத்தில் வெளிவந்த அப்டேட் வடி கிட்டத்தட்ட 512 பயனர்கள் சேர முடியும். 
  • அடுத்து நீங்கள் பகிரும் file 2GB வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • இதுவரை குரூப் காலில் 8 பேர் மட்டுமே இணைய முடியும். தற்போது 32 பேர் வரை இணையலாம்.
  • மேலும் நீங்கள் ஒருவரின் மெசேஜ்க்கு டைப் செய்து பதிலளித்து கொண்டிருந்தீர்கள். தற்போது அந்த மெசேஜை அழுத்தி பிடித்து எமோஜி மூலம் பதிலளிக்கலாம். 

கூடுதலாக, வாட்ஸ்அப்-பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ். நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும் பொழுது குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் ஹைலைட் செய்து காட்டலாம். அதன் மூலம் நீங்கள் எதை முக்கியமாக தெரிவிக்க நினைக்கிறீர்கள் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்கள். நீங்க ஹைலைட் செய்ய நினைக்கும் வார்த்தையை மூன்று விதமாக செய்யலாம். போல்டு, இட்டாலிக் மற்றும் ஸ்டிரைக். 

  • நீங்கள் ஒரு வார்த்தையை போல்டாக காண்பிக்க எண்ணினால், அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னும் * (star) போட வேண்டும்.
  • அதுவே நீங்கள் அந்த வார்த்தையை இட்டாலிக் ஸ்டைலில் காண்பிக்க நினைத்தால், அதற்கு முன்னும் பின்னும்  _ (underscore) டைப் செய்யுங்கள்.
  • இறுதியாக ஸ்டிரைக் செய்து காட்ட வேண்டும் என்றால், அந்த வார்த்தைக்கு முன்னும் பின்னும் ~ (tilde) சேர்க்க வேண்டும். 
  • இதை முயற்சித்து பாருங்கள். நிச்சியம் நீங்கள் யாருக்கு அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்.  

new whatsapp update news, new whatsapp update today, whatsapp new update today

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்