Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hyperloop Technology in India: 4 மணி நேர ட்ராவல்...வெறும் 20 நிமிடத்தில்...ஹைப்பர்லூப் டெக்னாலஜி மூலம்! எப்படி சாத்தியம்?

Priyanka Hochumin May 25, 2022 & 18:30 [IST]
Hyperloop Technology in India: 4 மணி நேர ட்ராவல்...வெறும் 20 நிமிடத்தில்...ஹைப்பர்லூப் டெக்னாலஜி மூலம்! எப்படி சாத்தியம்?Representative Image.

Hyperloop Technology in India: ஐஐடி மெட்ராஸுடன் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் ஹைப்பர்லூப் அமைப்பை மேம்படுத்தப்போவதாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது என்று பிடிஐ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் மூலதனமே அடுத்து என்ன செய்யலாம் என்னும் அந்த யோசனை தான். ஒரு கருவியை உருவாக்கியதுடன் கண்டுபிடிப்பாளர்களுக்கு வேலை முடிந்துவிடாது. அதில் இருக்கும் குறைகளை ஒவ்வொன்றாக கண்டரிடந்து அடிக்கடி அந்த கருவியை அப்டேட் செய்து கொண்டே இருக்கனும். அப்பொழுது தான் ஒரு நிறைவான மற்றும் பாதுகாப்பான தொழிநுட்ப கருவியை மக்கள் பயன்படுத்த முடியும். அந்த வகையில் மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட ரயிலில் அடுத்தடுத்து புதுப்பித்து கூட்ஸ் ட்ரெயின், passenger ட்ரெயின், எலக்ட்ரானிக் ட்ரெயின், மெட்ரோ ட்ரெயின் என்று நிறைய விதமான ரயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பங்களுக்கான சிறந்த மையத்தை அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைப்பர்லூப் என்றால் என்ன? | Hyperloop in India

ஹைப்பர்லூப் என்றால் அதிவேக போக்குவரத்து என்று அர்த்தம். இங்கு பிரஷர்டு வாகனங்கள், லோ பிரஷர் டனல் வழியாக பயணிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தரையில் நீங்கள் விமானத்தில் செல்வது போல் உணர்வீர்கள். இந்த சுரங்கத்தில் ரயில் செல்லும் பொழுது எந்த தடங்கலும் இன்று காற்று போல் நகர முடியும். எனவே, ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்ல கம்மியான நேரமே செலவாகிறது.

ஈக்கோ பிரென்ட்லி | Hyperloop Technology in India

இந்த காலகட்டத்தில் சுற்றுசூழலுக்கு பாதிக்கும் வகையில் தான் அனைத்து தொழிநுட்பங்களும் உருவாகி வருகின்றது. அந்த வகையில் இந்த மேக்-லெவ் டெக்னாலஜி (Mac-Lev technology) பாட்கள் மூலம் நகர்கின்றது. இதற்கு எலக்ட்ரிக் ட்ரெயினை காட்டிலும் கம்மியான எனர்ஜி தேவைப்படுகிறது, எனவே மிகவும் வேகமாக செல்கிறது. இது முழுக்க முழுக்க சுற்றுசூழலுக்கு ஏற்ற தொழிநுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஈக்கோ பிரென்ட்லி தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வருவதால், இந்த ஹைப்பர்லூப் டெக்னாலஜி அதில் ஒரு முக்கிய பங்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எப்போது தொடங்கப்பட்டது? | First Hyperloop Technology in India

2017 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவால் ஹைப்பர்லூப் தொழிநுட்பத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். எனவே, அவர் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல, அமெரிக்கா தலத்தில் உருவான ஹைப்பர்லூப் ஒன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு சரியாக எதுவும் அமையாததால் அது அப்படியே நிறுத்தப்பட்டது.

இருப்பினும் 2017 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸின் அவிஷ்கர் ஹைப்பர்லூப்பை உருவாக்கியுள்ளனர். இது இந்தியாவில் ஹைப்பர்லூப் அடிப்படையான போக்குவரத்தை உருவாக்கவும், மேம்படுத்தவும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும். ஸ்பேஸ்எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டி 2019 ஆம் ஆண்டு நடந்த பொழுது, முதல் பத்து பைனலிஸ்டில் இந்த குழுவும் ஒன்றாக. மேலும் அதில் இருந்த ஒரே ஆசிய குழு என்ற பெருமையையும் பெற்றது. அடுத்து 2021 ஐரோப்பிய ஹைப்பர்லூப்பில் " மிகவும் அளவிடக்கூடிய வடிவமைப்பு விருது" இந்த அணிக்கு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த நிறுவனம் ரயிலே அமைச்சகத்தை அணுகி, மையூரில் அமைந்துள்ள அதன் பயிற்சி வளாகத்தில் இந்த முதல் வகை ஹைப்பர்லூப் சோதனையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை விரைவு படுத்த இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

பட்ஜெட் எவ்ளோ தெரியுமா? | Hyperloop in India

இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வகையில் பல முயற்சிகளுடன் மேம்படுத்தப்படுகிறது. இது மட்டும் செயல்பாட்டிற்கு வந்தால், 4 மணி நேர செல்ல வேண்டிய இடத்திற்கு வெறும் 20 நிமிடங்களில் சென்றடையலாம். இந்த ஆராய்ச்சிக்கு கிட்டத்தட்ட 8.34 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மகாராஷ்டிரா அரசு, ரிச்சர்டு பிரான்சன் 'விர்ஜின் ஹைப்பர் லுாப் ஒன்' நிறுவனத்தின் நிறுவனரிடம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படுகிறது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்