Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓபிஎஸ்-க்கு ஓகே...இபிஎஸ்-க்கு நோ....டிடிவி போடும் ஸ்கெட்ச்...!

madhankumar August 10, 2022 & 12:13 [IST]
ஓபிஎஸ்-க்கு ஓகே...இபிஎஸ்-க்கு நோ....டிடிவி போடும் ஸ்கெட்ச்...!Representative Image.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன். ஓ.பன்னிர்செல்வத்துடன் கைகோர்க்க வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆனால் எடப்பாடியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி பூசல் என்பது அதிகரித்தது. தற்போது ஒற்றைத்தலைமை பிரச்சனையால் இரண்டாக உடைந்துள்ள அதிமுகவில் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். ஆனால் அது செல்லாது நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னிர்செல்வமும் தெரிவித்துவருகின்றனர். தற்போது இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையம் முடிவுக்காக காத்திருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தற்போது எடப்பாடி தரப்பு, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என அதிமுக மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இந்த போட்டியில் இருந்த டிடிவி தினகரன் கட்சியை விட்டு விலை அமமுக என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் மீது முழுக்கவனமும் செலுத்தி வருகிறார். அதிமுக யார்தலைமையில் இயங்கவேண்டும் என பிரச்னை நடந்துகொண்டிருக்கும் இந்த தருணத்தில், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள ஆமாமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய காட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க வைக்க டெல்லியில் உள்ள நலம் விரும்பிகள் நினைத்தனர். மேலும் எடப்பாடி மீது ஊழல் குற்றசாட்டுகள் இருப்பதால் அவருக்கு பதிலாக வேறு யாரையேனும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினாலும் நான் ஏற்க தயார் என டிடிவி கூடியதாக தெரிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி அந்த கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

மேலும் நடராஜன் இறப்பின் பொது பெங்களூரு நீதிமன்றம் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க முடிவெடுத்திருந்தது.ஆனால் அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த எடப்பாடி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட கூடும் என தெரிவித்து 5 நாட்களுக்கு மேல் பரோல் வழங்க கூடாது எனவும் அரசியல் தலைவர்களை சந்திக்க கூடாது எனவும் தெரிவித்தபோதுதான் அவரின் கொடூர முகத்தை பார்த்தேன், மேலும் எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்துபணியாற்ற வாய்ப்பு உள்ளதாவும் ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்