Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரே நேரத்தில் வேலையும் செய்து, குழந்தையைப் பாதுகாக்க முடியலயா..? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..! | Child Care Tips for Working Parents

Gowthami Subramani Updated:
ஒரே நேரத்தில் வேலையும் செய்து, குழந்தையைப் பாதுகாக்க முடியலயா..? அப்ப இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..! | Child Care Tips for Working ParentsRepresentative Image.

வேலை செய்யும் பெற்றோர்கள், ஒரே நேரத்தில் வேலையும் செய்து குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதில் மிகவும் சிரமப்படுவார்கள். இதனால், சில பெற்றோர்கள் மன அழுத்தத்துடன் காணப்படுவர்.  வேலை நேரத்தில் வேலை பார்ப்பதுடன், குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கும்.

அதே சமயம், தங்கள் குழந்தைகளுக்குச் சரியான அனுபவங்களைக் கொடுப்பதும் முழு அக்கறையுடன் செயல்படுவதும் குழந்தைகளுக்கு நன்மையைத் தரும். மேலும், குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் வாயிலாக கிடைக்கும் அன்பு கிடைக்காத போது, அவர்கள் மன அழுத்தம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பதிவில் பணிபுரியும் பெற்றோருக்கு குழந்தை பராமரிப்பு ஒரு முக்கிய படியாக இருப்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் காணலாம்.

வேலை பாதுகாப்பு

குறிப்பிட்ட நேரத்தில் பணி செய்யும் போது, குழந்தையை முழு நேரமாகப் பராமரிப்பதில் கடினமாக இருக்கும். மேலும், குழந்தையை முழு நேரமாகப் பராமரிப்பதும் மிக அவசியம் ஆகும். எனவே, குழந்தையைப் பகல் நேரத்தில் பராமரித்திட ஆள் ஒருவரை அதிலும் மிகவும் நம்பிக்கையான நபரைச் சேர்ப்பதன் மூலம், குடும்ப வருவாயைப் பாதுகாக்கலாம். அதே சமயம், நிரந்தர வேலை வாய்ப்பு செய்யவும் இது உடனிருக்கிறது.

அறிவாற்றல் வளர்ச்சியைக் காட்டுதல்

அதிக வேலைப்பளு கொண்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் செல்லும் இடத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். குழந்தைகளுடன் பொழுதுபோக்காக இருந்தால், அது வேலை செய்வதில் கடினமாக இருக்கும். மேலும், ஆய்வு ஒன்றில் கூறப்பட்டதாவது தரமான குழந்தை பராமரிப்பு சேவைகளில் இருக்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளை இட வலுவான அறிவாற்றல் வளர்ச்சியைப் பெற்றிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் எனக் காட்டுகிறது.

மழலைப் பள்ளிகளில் சேர்த்தல்

குழந்தையை மழலையர் பள்ளிக்கு சேர்ப்பதன் மூலம், அவர்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாறுவர். மேலும், ஆரம்ப பள்ளியைத் தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்னே பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் நேர்மறையான சமூக எண்ணங்களைக் கொண்டிருப்பர். எனவே, நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில், குழந்தைகளை மழலையர் பள்ளிக்கு அனுப்புவது நன்மையைத் தரும். அதே சமயம், குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் தகுதிவாய்ந்த பராமரிப்பு வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது.

பணிபுரியும் பெற்றோர் மற்றும் குழந்தை பராமரிப்பு

விலைவாசி உயர்வால் சில பெற்றோர்கள் வீட்டில் தங்கி குடும்பத்திற்கு நிலையான வருமானத்தைத் தருவது என்பது இயலாத ஒன்றாக அமைகிறது. மேலும், பணிபுரியும் பெற்றோர்கள் குழந்தைப் பராமரிப்பை சவாலாக ஏற்றுக் கொள்வார்கள்.

குறிப்பாக, ஆராய்ச்சி ஒன்றிற்குப் பிறகு குழந்தைகளின் உணர்ச்சி, நடத்தை, உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் குழந்தை பராமரிப்பு என்பது முக்கியத்துவமான ஒன்றாக உள்ளது. எனவே, பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால் பொருளாதாரத்தையும், குழந்தையையும் சமமாக பேணிக்காப்பது அவசியம் எனக் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு, பொருளாதார மேன்மையில் கவனம் செலுத்திகிறார்களோ, அதைவிட அதிகமாக குழந்தைப் பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இவை அனைத்தும் பணிபுரியும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தைகள் பராமரிப்பின் முக்கியத்துவம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்