Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? | How to Make Horlicks at Home for Babies

Nandhinipriya Ganeshan Updated:
குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி? | How to Make Horlicks at Home for BabiesRepresentative Image.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவுகளை கொடுக்க தொடங்கலாம். குறிப்பாக, சத்தான உணவுகளை கொடுக்க வேண்டியது அவசியம். அதனால், பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைகளுக்கென்று விற்பனை செய்யப்படும் ஹார்லிக்ஸ் பவுடரை வாங்கி பாலில் கலந்துக் கொடுப்பார்கள். இருப்பினும், அவை எவ்வளவு ஆரோக்கியத்தை தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதனால், வீட்டிலேயே ஹார்லிக்ஸ் தயார் செய்து கொடுக்கலாம். குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

➦ பாதாம் - 1 கப்

➦ முந்திரி - 1 கப்

➦ பிஸ்தா - 1 கப்

➦ பால் பவுடர் - 1 கப்

➦ முளைக்கட்டிய முழு கோதுமை - 2 கப்

செய்முறை:

➦ முதலில் கோதுமையை எடுத்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர், அதை மீண்டும் தண்ணீய்ர் சேர்த்து 6-7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

➦ 7 மணிநேரம் கழித்து தண்ணீரை வடிகட்டிவிட்டு, வெள்ளை துணியில் கோதுமையை போட்டு கட்டி, சமையல் அறையில் உள்ள ஜன்னல் அல்லது எதிலாவது தொங்கவிடவும். 

➦ காலையும் மாலையும் கோதுமை இருக்கும் துணியின் மேல், லேசாக தண்ணீரால் அப்படியே தெளித்து விடவும். இரண்டு நாள் வரை இப்படி செய்யலாம். 3-4 நாளில் கோதுமை முளைவிட்டிருக்கும். 

➦ 4வது நாளில் அன்று காலை தண்ணீர் தெளிக்காமல், கோதுமையை துணியிலிருந்து எடுத்து, ஒரு உலர்ந்த வெள்ளைத் துணியில் முளைவிட்ட கோதுமையை போட்டு நன்றாக உலரவிடவும்.

➦ இப்போது, பாதாம், முந்திரி, பிஸ்தா மூன்றையும் தனித்தனியாக வாணலில் கொட்டி 5-6 நிமிடங்கள் கை விடாமல் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மூன்றையும் வறுத்தபிறகு, ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். 

➦ நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர், உலர்ந்த முளைக்கட்டிய கோதுமையை மிக்ஸி ஜாரில் போட்டு அதையும் பவுடராக அரைத்து கொள்ளவும்.

➦ இப்போது அரைத்த இந்த பவுடரை ஒன்றாக கலந்து சல்லடையில் வைத்து சலித்து எடுக்கவும். பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் கொட்டி தினமும் சர்க்கரை சேர்க்காமல் குழந்தைகளுக்கு பாலில் கலந்துக் கொடுக்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்