Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளுக்கு இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி? | Organic Kajal for Newborn Baby

Nandhinipriya Ganeshan Updated:
குழந்தைகளுக்கு இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி? | Organic Kajal for Newborn BabyRepresentative Image.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அழகு சேர்ப்பதே இந்த கண் மை தான். எவருடைய கண்ணும்படக் கூடாது என்பதற்காக பிறந்த குழந்தைகளுக்கு கண்களிலும், கன்னத்திலும் கண் மை (காஜல்) வைப்பார்கள். நம் முன்னோர்கள் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் என்று நமக்கும் தெரியுமல்லவா! ஆம், கண்களில் கண் மை வைப்பது அழகு சேர்ப்பதற்காக மட்டுமல்ல. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் தான். அதாவது, கண் மை கண்களுக்கு குளுமையை தரக்கூடியது. அதனால் தான் தினமும் கண் மை வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. கண் மையை எத்தனையோ அழகு சாதன நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. ஆனால், அவற்றில் கரி, ஈயம், செயற்கை நிறம் அல்லது சில்வர் நைட்ரேட் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. 

இது கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும். அதை தொடர்ந்து பயன்படுத்துவரும்போது கண்களில் வேறு சில பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். நினைத்து பாருங்கள்! குழந்தைகளுக்கு அம்மாதிரியான மைகளை பயன்படுத்தும்போது எப்படி இருக்கும் என்று. எனவே, அவற்றை தவிர்த்துவிட்டு 100% இயற்கையான கண் மையை நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்கள் கண்களின் அழகை மேம்படுத்துவதோடு, கண்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும். சரி வாங்க, கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் கண் மை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

➦ சந்தன பொடி - 2 டீஸ்பூன்

➦ நெய் - 2 டீஸ்பூன்

➦ விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன்

➦ பாதாம் பருப்பு - 1

➦ களிமண் விளக்கு - 1

➦ காட்டன் துணி

குழந்தைகளுக்கு இயற்கை முறையில் கண் மை தயாரிப்பது எப்படி? | Organic Kajal for Newborn BabyRepresentative Image

வீட்டில் காஜல் தயாரிக்கும் முறை:

➦ முதலில் சந்தனப் பொடியை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல கலக்கிக்கொள்ளுங்கள். அதில் காட்டன் துணி போட்டி நன்றாக நனைத்து வெயிலில் சிறிது நேரம் காயவிடவும். இப்போது, உலர்ந்த துணியை விளக்கு திரி போன்று உருட்டிக்கொள்ளுங்கள். தயார் செய்த திரியை களிமண் விளக்கில் வைத்து அதோடு நெய் சேர்த்து விளக்கை (பூஜை அறையில் வழக்கம்போல் தீபம் ஏற்றுவது போல) ஏற்றவும். 

➦ பின்னர் விளக்கை ஒரு தட்டில் வைத்து அதை சுற்றிலும் நான்கு சில்வர் அல்லது கண்ணாடி டம்ளர்களை வைத்து, அதன்பீது சில்வர் தட்டு ஒன்று கவுத்துவிடவும். அதற்கு முன்பு சில்வர் தட்டு முழுவதும் விளக்கெண்ணெய்யை தடவிக் கொள்ளுங்கள். விளக்கு முழுவதும் எறிந்தவுடன் அந்த தட்டை எடுத்துப்பார்த்தால், கரி படிந்திருக்கும். அதை ஒரு கத்தியை கொண்டோ அல்லது ஸ்பூனை பயன்படுத்தியோ சுரண்டி ஒரு சிறிய பாத்திரத்தில் சேமித்து கொள்ளுங்கள். இப்போது, நாம் எடுத்துவைத்துள்ள இரண்டு பாதாம் பருப்பை அடுப்பில் காட்டி தீய வைத்துக் கொள்ளுங்கள்.

➦ அதை ஒரு கரண்டியை கொண்டு நசுக்கினால், பவுடர் போல நொறுங்கும். அந்த பவுடரை நாம் தயாரித்து வைத்து கரியில் சேர்த்து 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளவும். உங்களுக்கு எந்த பதத்திற்கு வேண்டுமோ அந்தளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் கருமையான இயற்கையான கண் மை தயார். இதை ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கன்டெய்னரில் சேகரித்து தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்