Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?

Vaishnavi Subramani Updated:
குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?Representative Image.

பொதுவாகக் குழந்தைகளைத் தினமும் குளிக்க வைக்க வேண்டும். ஆனால் தலைக்கு அதிகமாகக் குளிக்க வைக்கக் கூடாது. குழந்தைகளை அதிக நேரம் குளிக்க வைத்தால் நன்றாக தூக்கம் வரும் எனப் பலரும் சொல்லுவார்கள் அது தவறு. இது போன்று தவறுகள் மீண்டும் செய்யாமல் இருப்பதற்கும், குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?Representative Image

குழந்தைகளைத் தலைக்குக் குளிக்க வைப்பது

✤ குழந்தைகளைக் கோடைக்காலத்தில் குளிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதில் குழந்தைகளின் சருமம் தாங்கும் அளவிற்குத் தான் சூடான நீரில் குளிப்பாட்டவேண்டும்.

✤ பச்சிளம் குழந்தை என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தலைக்குக் குளிக்க வைக்க வேண்டும். பச்சிளம் குழந்தை என்றால் முதலில் அந்த தண்ணீரை நம் கைகள் வைத்து வெதுவெதுப்பாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

✤ அதற்குப் பிறகு தான், குழந்தைகளின் காலில் ஊற்றி அதற்குச் சரியாக இருந்தால் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அதில் சிறிதளவு குளிர்ந்த நீரில் சேர்த்துக் குளிக்க வைக்கலாம்.

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?Representative Image

✤ ஆறு மாத குழந்தை என்றால் அந்த குழந்தையை வாரத்திற்கு  மூன்று அல்லது நான்கு நாட்கள் தலைக்கு குளிக்க வைக்கலாம். ஆனால் சூடான நீராக இருந்தால் முதலில் நம்மால் தாங்க முடியும் என்றால் மட்டும் குழந்தைகளுக்குக் குளிக்க வைக்க வேண்டும். வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம்.

✤ பச்சிளம் குழந்தை மற்றும் ஆறுமாதம், ஒரு வருடக் குழந்தையாக இருந்தாலும் அதிக நேரம் குளிக்க வைத்தால் தூக்கம் நன்றாக வரும் மற்றும் உடலுக்கு நல்லது எனச் சொன்னால் அது சரியில்லை. எந்த குழந்தையாக இருந்தாலும் 5லிருந்து 7நிமிடங்களுக்குள் குளிக்க வைக்க வேண்டும்.

✤ கோடைக்காலத்தில் ஆறு மாதங்கள் ஆன குழந்தையாக இருந்தால் மிகவும் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. சாதாரண வெப்பநிலையில் உள்ள குளிர்ந்த நீரைப் பயன்படுத்தலாம்.

குழந்தைகளை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளிக்கவைப்பது ?Representative Image

✤ குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் பயன்படுத்தக் கூடாது. வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி குழந்தைகளுக்குப்  பயன்படுத்து சோப்பு மற்றும் ஷாம்பு அல்லது வீட்டில் உள்ள கடலைமாவும் பயன்படுத்தி குழந்தைகளைக் குளிக்க வைக்கலாம்.

✤ ஆறுமாதம் ஆன குழந்தை என்றால் கைகள் மற்றும் கால்களை நன்றாகத் தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும். குழந்தைகளின் தலைக்குக் எனக் கடைகளில் விற்கும் ஷாம்பு அல்லது வீட்டில் தயாரிக்கும் ஷாம்பு கூட பயன்படுத்தலாம்.

✤ குழந்தைகளின் தலைக்குக் குளிக்க வைக்கும் போது முகத்தில்  தண்ணீர் வராமல் இருக்கக் கண்களுக்கு மேல் உள்ள இடத்தில் கைகள் வைத்துக் குளிக்க வைக்க வேண்டும்.

✤ தலைக்குக் குளிக்க வைத்த பிறகு, உடலுக்குக் குளிக்க வைக்க வேண்டும். சளிப்பிடித்து இருந்தால் அதிகமாக தலைக்கு குளிக்கவைக்க கூடாது. வெதுவெதுப்பான நீரில் மட்டும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் தலைக்கு குளிக்க வைப்பதை தவிர்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்