Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

முகத்தில் பயன்படுத்தக் கூடாத 5 பொருட்கள்!!!

Hemalatha Krishnamoorthy January 21, 2022 & 15:04 [IST]
முகத்தில் பயன்படுத்தக் கூடாத 5 பொருட்கள்!!!Representative Image.

பெண்கள் முக அழகை அதிகரிக்க பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றனர். செயற்கையான அழகு சாதனப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துவிட்டு, வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களை  சருமத்தில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதைப் பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

வெந்நீர் (Hot Water)

முகத்தைக் கழுவுவதற்கு, வெப்பமான நீரை பயன்படுத்தாதீர்கள் அது உங்கள் சருமத்திற்குப் பாதிப்பை விளைவிக்கும்.

அதே போன்று வெப்பமான நீரின் ஆவியை முகரக் கூடாது. சூடான நீர் உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, உங்கள் சருமத்தை வறண்ட தன்மை செய்வதோடு, சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை அகற்றி விடுகிறது.

அதே போன்று அதிக குளிர்ந்த நீரையும் பயன்படுத்தக் கூடாது ஏன் என்றால், அது சருமத்தை இறுகச் செய்திடும். அதனால் மிதமான குளிர்ந்த நீரையே பயன்படுத்தி உங்கள் சருமத்தைச் சுத்தம் செய்யுங்கள். 

சமையல் சோடா\ பேக்கிங் சோடா (Baking Soda)

இந்த பேக்கிங் சோடாவை சருமப் பொலிவு பெறப் பயன்படுத்துவதுண்டு. இதனை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதால் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் சருமத்தை எரியச்செய்யும். 

ஆனால், சிறிது நேரத்தில் சரும வெடிப்பு, முகம் சிவத்தல், எரிச்சல், வீக்கம்  போன்ற விளைவைத் தெரியப்படுத்தும். இதனால் முகத்தில் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக் கூடாது.

எலுமிச்சை (Lemon)

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உண்மையில் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் உங்கள் முகத்தில் பச்சை எலுமிச்சை துண்டுகள் அல்லது எலுமிச்சை சாற்றைத் தடவுவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். 

எலுமிச்சையில் உள்ள ப்சோராலன் (Psoralen) என்ற வேதிப்பொருள் சரும ஒளியின் உணர்திறன் கொண்டது. எலுமிச்சையைப் பயன்படுத்திய பிறகு, சூரிய ஒளியில் செல்லும் போது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். 

பற்பசை (Tooth Paste)

பல் துலக்கியை பயன்படுத்தி பற்களை மட்டும் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், சிலர் அதனைப் பயன்படுத்தி முகப் பருக்களை போக்குவதற்கு உபயோகிக்கின்றனர். 

பற்பசையில் (Tooth Paste) பல ரசாயனங்கள் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு பற்பசையை  (Tooth Paste)  முகத்திற்குப் பயன்படுத்தும் போது அது நம் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் கருமையாகவும், முகப்போலிவிற்க்கும் தீங்கு விளைவிக்கும்.

ஹேர் ஸ்ப்ரே (Hair Spray)

ஹேர் ஸ்ப்ரேவை பயன்படுத்தி மேக்கப்பை அமைப்பது உங்கள் சருமத்தைத் சேதப்படுத்தும். ஹேர் ஸ்ப்ரேயில் ஆல்கஹால் (Alcohol) இருப்பதால் அது சருமத்தின் ஈரப்பதத்தைக் குறைக்கிறது. 

சிறிது நேரத்தில் உங்கள் தோல் வறண்டு, மந்தமாகி, வயதான தோற்றத்தை அளிக்கும். ஹேர் ஸ்ப்ரேக்களில் பல்வேறு இரசாயனங்கள் உள்ளன, அவை சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம், மேலும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

இந்த தவறுகளைத் தவிர்த்து உங்கள் சருமத்தைத் சேதத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்