Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர செய்யும் ஹேர் சீரம்.. | How to Make Serum for Hair Growth

Nandhinipriya Ganeshan Updated:
முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர செய்யும் ஹேர் சீரம்.. | How to Make Serum for Hair Growth Representative Image.

அடர்த்தியான முடியை பெறுவது அவ்வளவு பெரிய கடினமான விஷயம் ஒன்றுமில்லை. மிகவும் எளிமையான முறையில், தலை முடிக்கு ஊட்டச்சத்து கொடுக்கக்கூடிய இயற்கையான அழகு குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எது உங்களுடைய கூந்தலுக்கு செட்டாகிறது என்பதை கண்டிப்பிடுத்துவிட்டாலே போதும். நீண்ட அடர்த்தியான முடியை பெறுவதற்காக நம்மில் பலரும் ரசாயனங்கள் அடங்கிய ஷாம்பு, சீரம் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், அவை அனைத்தும் முடிகளுக்கு நன்மையளிக்க கூடியவை அல்ல. எனவே அதற்கு மாறாக இயற்கை முறையை கையாளலாம். இருப்பினும், அனைவருக்கும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஹேர் பேக் ஒத்துக்காது, அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, உடலுக்கு தகுந்தபடி ஹேர் பேக்குகளை பயன்படுத்துவதே சிறந்தது.

ஆனால், ஹேர் பேக்கை விட ஹேர் சீரம் அனைவரும் செட்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, ஹேர் பேக் செட்டாகவில்லை என்றால், ஹேர் சீரம் பயன்படுத்துவது. அப்படி ஒரு சுலபமான வீட்டில் இருக்கக்கூடிய பொருட்காய் வைத்தே தயார் செய்யக்கூடிய ஒரு ஹேர் சீரம் தான் பார்க்கப் போகிறோம்.

முடி கொட்டுவதை தடுத்து அடர்த்தியான முடி வளர செய்யும் ஹேர் சீரம்.. | How to Make Serum for Hair Growth Representative Image

ஹேர் சீரம் தயார் செய்யும் முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும். பின்னர், அந்த தண்ணீரில் 1 டீஸ்பூன் டீ தூள், 1 ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடியளவு மருதாணி இலை, 2 பெரிய வெங்காயத்தின் தோல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். நாம் ஊற்றிய ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் அளவு சுண்டி வரும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதை வடிக்கட்டி நன்றாக ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

அதை அப்படியே தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி ஸ்ப்ரே செய்து மென்மையாக மசாஜ் செய்து சுமார் 30 நிமிடம் கழித்து நீங்கள் எப்பவும் பயன்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசிவிடுங்கள். ஒருவேளை உங்க வீட்டில் ஸ்ப்ரே பாட்டில் இல்லையென்றால், காட்டன் பஞ்சை அந்த சீரமில் நனைத்து வேர்க்காலில் வைத்து வைத்து எடுங்கள்.

பிறகு மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளித்துவிடுங்கள். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்துவர உங்கள் தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளர தொடங்கிவிடும். தொடர்ந்து ஒரு மாதம் இதை முயற்சி செய்து பாருங்கள். அப்போதுதான் அதன் ரிசல்ட் உங்களுக்கு தெரியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்