செலினா கோமஸின் 'Rare Beauty' அழகு சாதன பொருட்கள் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த Rare Beauty பிராண்ட் 2019 ஆம் ஆண்டு மிகவும் திறமையான கலைஞரால் நிறுவப்பட்டது. இது ஒரு சர்வதேச அளவில் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த அழகு சாதனங்களை பயன்படுத்தும் மக்கள் நல்ல ரிவ்யூக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிராண்ட் தன்னுடைய தனித்துவம், எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளின் விரிவாக்கம் என்றும் செலினா குறிப்பிடுகிறார்.
அந்த வகையில், இன்று காலை செலினா தனது இந்திய ரசிகர்களுடன் மிகவும் உற்சாகமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள Rare Beauty’s சோசியல் மீடியாவைப் பயன்படுத்தியுள்ளார். அதில் "வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் இந்தியாவில் கடைகளில் மற்றும் ஆன்லைனில் Rare Beauty அழகு சாதன பொருட்களை அறிமுகம் செய்ய மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். உங்கள் விருப்பப்பட்டியலில் உள்ளதை வாங்கத் தயாராகுங்கள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…