இன்றைக்குப் பலரும் தலைக்கு ஒரு வகையான பேஸ்ட் மற்றும் பராமரிப்பு, உடலுக்குத் தனி பேஸ்ட் மற்றும் பராமரிப்பு, எனப் பல வகையான க்ரிம்கள் பயன்படுத்துவார்கள். இதில் முகத்திற்கு எனப் பல க்ரிம்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு வாரத்தில் பல வகையான க்ரிம்கள் உடலில் பயன்படுத்துகின்றனர்.
✤ ஆனால் அதன் மூலம் சில நாட்கள் மட்டும் தான் பலன் தரும். சில நாட்கள் மட்டும் பலன் தரும் க்ரிம்களை அதிகமாகக் காசு செலவு செய்து வாங்கி பயன்படுத்துவார்கள்.
✤ ஆனால் செலவே இல்லாமல் தலை முதல் கால் வரை உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் பொலிவுடனும் ஆரோக்கியம் ஆகவும் இருக்க ஒரு இயற்கையான முறையில் ஒரு பேஸ்ட் செய்வது எப்படி.
✤ இந்த பதிவில் இந்த பேஸ்ட் பயன்படுத்தினால் தலைமுதல் கால் வரை பொலிவுடன் மின்னும் அப்படி என்ன பேஸ்ட் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ அந்த இயற்கையான பொருள் வல்லாரை மூலிகை தான். வல்லாரை என்றால் முதலில் நினைவிற்கு வருவது இது நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்காகச் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான்.
✤ இதில் பல வகையான சத்துகள் நிறைந்துள்ளது. இந்த மூலிகை என்பது சிறந்த கிருமிநாசினியாகப் பயன்படும். இதைப் பலரும் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவார்கள்.
தேவையான பொருள்கள்
✤ வல்லாரை – 100 கிராம்
✤ முதலில் தண்ணீர் சேர்த்தாமல் வல்லாரையை எடுத்து முழுவதுமாக அரைக்கவும். அதை முகத்தில் பூசுவதற்கு முன்பாக, முகத்தில் மேக்கப் மற்றும் வேறு எந்த க்ரிம் அப்ளை செய்யாமல் இருக்க வேண்டும்.
✤ தலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்குக் குளித்து இருந்தால் தலை நன்றாகக் காய வைக்க வேண்டும். தலை காய்ந்த பின், முகம் மற்றும் தலையில் இந்த பேஸ்ட் அப்ளை செய்ய வேண்டும்.
✤ அதை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் காய விட வேண்டும். அதற்குப் பின், தலைக்குக் குளிக்கலாம் மற்றும் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.
✤ இதை ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம். இதே போல் தொடர்ந்து 48 நாட்கள் பயன்படுத்தினால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
✤ இந்த பேஸ்ட் தலை மற்றும் முகம், சருமம் என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்தினால் பல வகையான நன்மைகள் உள்ளது.
✤ இதை முகம் மற்றும் உடலில் பயன்படுத்தினால் உடல் மிகவும் ஆரோக்கியம் ஆகவும் மற்றும் முகம் பொலிவுடனும், அழகாகவும் இருக்கும்.
✤ இதைத் தலைமுடிக்குப் பயன்படுத்தினால் முடி மிகவும் கருமையாகவும் மற்றும் பொடுகு பிரச்சனைகள் இருந்தால் அதை இந்த வல்லாரைச் சரிசெய்யும்.
✤ தலையில் நரைமுடிகள் இருந்தால் கூட குறையும். முகத்தில் இந்த வல்லாரை பேஸ்ட் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சூரியனால் முகத்தில் ஏற்பட்ட கருமைகள் என அனைத்தும் சரியாகும்.
✤ முகத்தில் ஏற்பட்ட காயங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எனப் பல பிரச்சனைகள் சரியாகும். இந்த வல்லாரைச் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காயங்கள் மற்றும் முகப்பரு, தழும்புகள் என அனைத்தையும் சரி செய்து தரும்.
✤ இந்த வல்லாரை உடல் மற்றும் முகத்தில் பயன்படுத்தினால் எந்த விதமான பக்கவிளைவுகளும் இதில் இல்லை. இந்த வல்லாரையை எதுவும் சேர்க்காமல் அரைத்துப் பூசினால் தொடர்ந்து செய்தால் விரைவில் நல்ல பலன்கள் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…