Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சரும துளைகளை சிறிதாக்கி முகத்தை ஜொலிக்க வைக்க ஸ்டிராபெர்ரி சுகர் ஸ்கிரப் | Strawberry Sugar Scrub Benefits

Priyanka Hochumin Updated:
சரும துளைகளை சிறிதாக்கி முகத்தை ஜொலிக்க வைக்க ஸ்டிராபெர்ரி சுகர் ஸ்கிரப் | Strawberry Sugar Scrub BenefitsRepresentative Image.

அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்யாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஸ்டிராபெர்ரி பிரௌன் சுகர் ஸ்கிரப்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்டிராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ - ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.

தேவையான பொருட்கள்

ஸ்டிராபெர்ரி - 3 அல்லது 4

பிரௌன் சுகர் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை

ஸ்டிராபெர்ரி நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும்.

இப்போது துண்டு துண்டாக நறுக்கிய ஸ்டிராபெர்ரியை மசித்து எடுத்துக்கொள்ளவும்.

இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் ரெடி.

பயன்படுத்தும் விதம்

சுத்தமான சருமத்தில் இந்த ஸ்கிரப்பை பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.

அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

அடுத்து 10 நிமிடத்திற்கு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை உணர்வீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்