Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சருமப் பொலிவை அதிகரிக்கும் ஹோம்மேட் ரோஸ் க்ரீம்.. தயார் செய்வது எப்படி? | Homemade Skin Whitening Rose Cream

Nandhinipriya Ganeshan Updated:
சருமப் பொலிவை அதிகரிக்கும் ஹோம்மேட் ரோஸ் க்ரீம்.. தயார் செய்வது எப்படி? | Homemade Skin Whitening Rose CreamRepresentative Image.

சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் வைட்னிங் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம். 

இது முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே வாரத்தில் அப்பகுதியில் இருக்கும் கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வாங்க! இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஸ் - 3 பூக்கள்

ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

கிளிசரின் - 1 ஸ்பூன்

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2

பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

வீட்டிலேயே ரோஸ் க்ரீம் தயாரிப்பது எப்படி?

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள பன்னீர் ரோஜாவை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் மைய அரைத்துக் கொள்ளவும். 

பின்னர், அதில் 2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அந்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு, அதில் பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூனை பயன்படுத்தி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். 

இவ்வாறு அடித்துக் கலக்கும்போது ஜெல் ரோஸ் கலரில் கிடைக்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரோஸ் க்ரீம் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு நாம் தயாரித்து வைத்துள்ள க்ரீமை அப்ளை செய்துக் கொள்ள வேண்டும். அடர்த்தியாக அப்ளை செய்யக்கூடாது. அதாவது, நாம் முகத்தில் சீரம் எப்படி பயன்படுத்துவோமோ அதேபோல் அப்ளை செய்ய வேண்டும். அதாவது, க்ரீமை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவ வேண்டும். 

இவ்வாறு செய்யும்போது முகம் இந்த க்ரீமை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். அதன்பிறகு தூங்க செல்லலாம். வேண்டுமென்றால், காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம். மேலும், உடல் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் சருமம் ஜொலி ஜொலிப்பாக மாறும். ஆனால், தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்