Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

How to Cure Mosquito Bites in Babies: குழந்தைகளுக்கு கொசு கடித்த இடத்தில் வீக்கமா இருக்கா, இந்த வீட்டு வைத்தியத்த பண்ணுங்க...!!!

Nandhinipriya Ganeshan July 29, 2022 & 09:15 [IST]
How to Cure Mosquito Bites in Babies: குழந்தைகளுக்கு கொசு கடித்த இடத்தில் வீக்கமா இருக்கா, இந்த வீட்டு வைத்தியத்த பண்ணுங்க...!!!Representative Image.

How to Cure Mosquito Bites in Babies: பொதுவாக, கொசு கடித்தால், கடித்த இடத்தில் அரிப்பு, வீக்கம் மற்றும் சிவப்பு புள்ளிகள் ஏற்படும். இது பெரியவர்கள் தாங்கி கொள்வார்கள், ஆனால் குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது அல்லவா. இப்போது, நீங்கள் கொசு கடிப்பதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகளை இங்கே தெரிந்துக் கொள்ளலாம். அரிப்பைக் குறைக்கவும், கடித்த பகுதியை ஈரப்பதமாக்கவும், பாதிக்கப்பட்ட பகுதியில் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம். இவை குழந்தைகளுக்கான கொசுக்கடி சிகிச்சை (mosquito bite treatment for baby) முறைகளாகும். 

ஆடி மாசத்துல பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா?

உங்கள் குழந்தையை ஒரு கொசு கடிக்கும் போது, கடித்த இடத்தில் உங்களுடைய கையால் துடைத்துவிட்டு, வீக்கம் மற்றும் அரிப்புகளைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதியில் குழந்தை மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். குழந்தைகளுக்கு கொசுக் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தனிப்பட்ட கிரீம்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்காகவே தயாரிக்கப்பட்டது என்பதால், அவை பாதுகாப்பானது. கடித்த இடத்தில் கிரீம் தடவுவதன் மூலம், அவை தோலில் ஏற்படும் எரிச்சலை ஆற்றும். அதுமட்டுமல்லாமல், இந்த லோஷன்கள் குழந்தைகளுக்கு அரிப்பு குறைவாக இருக்க உதவுகிறது. இரவு தூங்குவதற்கு முன்பு குழந்தையை குளிப்பாட்டி, நன்றாக துடைத்து லோஷனை (mosquito bite rash treatment) போட்டு விட்டு தூங்க வையுங்கள். இதனால், கொசு அவர்களை நெருங்காமல் இருக்கும். 

6+ மாத குழந்தைக்கு வீட்டிலேயே சத்து மாவு தயாரிப்பது எப்படி?

கொசு கடித்த இடத்தில் வீக்கம், மற்றும் அரிப்பு ஏற்படுவதால், குழந்தைகள் அதை சொறிய முற்படுவார்கள். அப்படி செய்தால் கூர்மையான விரல் நகங்கள் தோலை உடைத்து பாக்டீரியாவை உள்ளே சென்றுவிடும். எனவே, முடிந்தவரை குழந்தைகளுடைய நகங்களை வெட்டிவிடுவது நல்லது. மேலும், கடித்த பகுதியில் கீறல் ஏற்படாமல் இருக்க, குழந்தையின் கைகளை கையுறைகளால் மறைக்கலாம். ஆனால் கைகளிலோ அல்லது உள்ளங்கைகளிலோ கடிபடும் போது கையுறைகளைப் பயன்படுத்த வேண்டாம்.

கொசு கடிக்கு வீட்டு வைத்தியம்:

உங்கள் சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கொசுக்கடிக்கு சிகிச்சை அளிக்கலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் பயனுள்ள வீட்டு வைத்தியம் (mosquito bite immediate treatment) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை

எலுமி ச்சையை நறுக்கி, பாதிக்கப்பட்ட பகுதியில் மெதுவாக தேய்க்கவும். அல்லது எலுமிச்சை சாற்றை சருமத்தில் தடவுங்கள். எலுமிச்சையில் இருக்கும் மயக்க மருந்து மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் கொசு கடிக்கு இயற்கையான மருந்தாக செயல்படுகிறது. இது வலி மற்றும் வீக்கத்தை விரைவில் குறைக்க உதவுகிறது.

உப்பு

கொசுக் கடிக்கு உப்பு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது வீக்கத்தையும் வலியையும் தணிக்க உதவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியை கடல் உப்பு மற்றும் தண்ணீரால் சுத்தப்படுத்தினால் விரைவான நிவாரணம் கிடைக்கும். பூச்சிக் கடிக்கும் இது ஒரு விரைவான தீர்வாகும், இது எப்போது வேண்டுமானாலும் உங்கள் சமையலறையில் கிடைக்கும் பொருள் என்பதால் இதை பயன்படுத்தலாம். 

பூண்டு

பொதுவாக பூண்டின் வாசனை கொசுகளுக்கு சுத்தமாக ஆகாது. அதுமட்டுமல்லாமல், கொசு கடித்த இடத்தில் வைத்தாலும் அரிப்பு விரைவில் குணமாகும். ஒரு பல்லு பூண்டை நசுக்கி, கடித்த இடத்தில் மெதுவாக தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து ஈர துணியால் சுத்தம் செய்து விடுங்கள். இது வீக்கம் மற்றும் அரிப்பை எளிதில் குறைக்கிறது. பூண்டு ஒரு இனிமையான தைலமாக செயல்படும் ஒரு பழங்கால மருந்து.

கற்றாழை

கற்றாழை பல குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். மேலும், இது கொசு கடிக்கு ஒரு சிறந்த நிவாரணி, இது வலி, வீக்கம் மற்றும் அரிப்பு ஆகியவற்றை குறைக்கிறது. செடியின் ஒரு சிறிய பகுதியை வெட்டி, கடித்த இடத்தில் நேரடியாகப் பயன்படுத்தவும். இது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வலி மற்றும் அரிப்பு (mosquito bite rash treatment) ஆகியவற்றைத் தணிக்கும்.

உங்க குழந்தையும் கலரா இருக்கனுமா? இத பண்ணுங்க..

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா தோலின் pH அளவை நடுநிலையாக்கி அரிப்புகளை போக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். அதில் ஒரு மென்மையான டவலை ஊறவைத்து, கடித்த பகுதிகளை மெதுவாக 10 நிமிடம் துடைக்கவும். இந்த செயல்முறை அரிப்புகளை உடனடியாக குறைக்கிறது. உங்கள் குழந்தையின் தோல் அரிப்பு ஏற்படத் தொடங்கும் பட்சத்தில், மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

தேன்

தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பல்வேறு தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கொசுக் கடியைத் தணிக்கவும், வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடனடி இயற்கை சிகிச்சைக்கு, பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது தேனை தடவவும். சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும். தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கடித்த இடத்தில் மேலும் தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

ஐஸ் கட்டி

ஐஸ் உங்கள் சருமத்தை மரத்துப்போகச் செய்து, வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு ஐஸ் கட்டியை நசுக்கி பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால் வீக்கம் குறையும். ஐஸ் பேக்கைப் பயன்படுத்தவும் அல்லது நொறுக்கப்பட்ட ஐஸ்கட்டியை ஒரு சிறிய துணியில் வைத்து கடித்த இடத்தில் வைக்கவும். 5 நிமிடங்களுக்கு மேல் நேரடியாக தோலில் ஐஸ் வைக்காதீர்கள், ஏனெனில் இது சரும செல்களுக்கு சேதம் விளைவிக்கும்.

துளசி

துளசி இலைகளில் உள்ள யூஜெனால் என்ற கலவை எரிச்சலை தணித்து எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சிறிது துளசி இலைகளை எடுத்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர், அதில் ஒரு பஞ்சை நனைத்து கொசு கடித்த இட த்தில் மெதுவாக (Mosquito Bite Immediate Treatment) துடைத்து எடுக்கவும். இது அரிப்பை எளிதில் குறைக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்