Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Increase Height Naturally in Tamil: 21 வயசுக்கு அப்புறம் உயரமா வளரனுமா..? அதுவும் ஒரே மாசத்துல.. அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 15:00 [IST]
How to Increase Height Naturally in Tamil: 21 வயசுக்கு அப்புறம் உயரமா வளரனுமா..? அதுவும் ஒரே மாசத்துல.. அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..Representative Image.

How to Increase Height Naturally in Tamil: நம்மில் பெரும்பாலானோர் வளரக்கூடிய பருவத்தில் அதிகமாக வளர்ந்துவிடுகிறார்கள். ஆனால், சிலர் தனது வயதிற்கு ஏற்ற உயரத்தை பெறுவதில்லை. இதற்கு காரணம் மரபணு, ஹார்மோன்களின் மாற்றம் போன்றவையே. இவற்றை பொறுத்தே உங்களின் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. பெண்களை பொறுத்தவரையில் 16 வயதுக்குள் அதிகபட்ச உயரத்தை அடைந்துவிடுகிறார்கள். ஆண்களோ 14 முதல் 18 வயதிற்குள் உயரத்தை அடைந்துவிடுகிறார்கள். ஒருவேளை அந்த வயதில் வளர முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? வாங்க பார்க்கலாம்.

டீன் ஏஜ் வயதில் உயரத்தை அதிகரிப்பது எப்படி?

பொதுவாக டீன் ஏஜ் வயதில் உயரத்தை அதிகரிப்பது எளிது. அதற்காக நீங்க செய்ய வேண்டியதெல்லாம் கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் டி (பால், மீன், சோயா, காளான், தானியங்கள்), கால்சியம் (பால், சீஸ், முட்டை) ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பச்சைபட்டாணி, கேரட், முட்டைகோஸ், பருப்பு வகைகள், கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும். அதன்பிறகு, முறையான தூக்கமும் இயற்கையான வளர்ச்சிக்கு (how to grow taller naturally in tamil) உதவும்.

டீன் ஏஜ் வயதிற்கு பிறகு உயரத்தை அதிகரிப்பது எப்படி?

பொதுவாக 21 வயதிற்கு பிறகு உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்குமே இருக்கும். ஆனால் அந்த வயதில் எலும்புகளில் வளர்ச்சி நிலையானது நிறுத்தப்படுகிறது. இருந்தாலும் சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் குறைந்தது சில அங்குலம் வரையாவது நாம் வளர முடியும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

❖ ஒரே இடத்தில் அல்லது சேரில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் உங்களுடைய முதுகெலும்பு பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதனால் வளர்ச்சி குறையலாம். அதனால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

❖ தினமும் முதுகெலும்பு பயிற்சிகள் செய்து வந்தால் உடலில் உயரம் குறையாமல் இருக்கும் அதேசமயம் சில அங்குல அளவில் அதிகரிக்கவும் ( how to increase height after 21 age) வாய்ப்புள்ளது.

❖ ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், நம்முடைய தசையும் வளர்ச்சியடையும். எனவே, தினமும் காலை வேளையில் ஸ்கிப்பிங் (how to increase height naturally at home) செய்யுங்கள்.

❖ உயரமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தடாசனத்தை (height increase yoga) செய்ய முயற்சி செய்யலாம். தடாசனம் ஆரம்ப அடிப்படை (Mountain Pose) ஆசனம். இது எளிதான அதேவேளையில் மிகச்சிறப்பான ஆசனமாகும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். இந்த ஆசனம் செய்வதால் குதிகால் வலி சரியாகும்.

❖ தினமும் காலையில் உயரமான கம்பியை பிடித்து தொங்குவதால் தசைகள் நன்கு வளர்ச்சி அடையும். இதனால் நம்முடைய உயரமும் (height increase exercise in Tamil) அதிகரிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்