Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

தித்திப்பான சுவையில் ரோஸ் கீர் செய்வது எப்படி? | Rose Kheer Recipe in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
தித்திப்பான சுவையில் ரோஸ் கீர் செய்வது எப்படி? | Rose Kheer Recipe in TamilRepresentative Image.

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

அரிசி - 1/2 கப்

ரோஸ் வாட்டர் - 3 சொட்டு

சர்க்கரை - 1/4 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

உலர்ந்த ரோஜா இதழ்கள் - சிறிதளவு

நறுக்கிய பாதாம் பருப்பு - சிறிதளவு

நறுக்கிய முந்திரி - சிறிதளவு

உலர் திராட்சை - சிறிதளவு

ரோஸ் கீர் ரெசிபி செய்முறை:

முதலில் அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஒரு அடிகடிமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். 

இப்போது அரிசியை நன்றாக கழுவி கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் அரிசி பாலில் குழையும் வரை வேக விடவும்.

அரிசி பாதிக்குமேல் வெந்ததும் உலர்ந்த ரோஜா இதழ்கள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்துக்கொள்ளவும். அரிசி முழுவதுமாக வெந்த பிறகு அதில் பொடியாக்கிய சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். 

ரொம்ப நேரம் அவ்வளவு தான் இப்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் மீது நறுக்கிய பாதாம், முந்திரி, மற்றும் திராட்சையை தூவி விடவும்.

தித்திப்பான ரோஸ் கீர் தயார். சுடாகவும் பரிமாறலாம் அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்