Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம் தான் காரணம்.. தடுப்பது எப்படி? | How to Prevent Kidney Stones Naturally

Nandhinipriya Ganeshan Updated:
சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம் தான் காரணம்.. தடுப்பது எப்படி? | How to Prevent Kidney Stones NaturallyRepresentative Image.

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் ஒரு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை தான் இந்த 'சிறுநீரகக் கல்'. இருப்பினும், பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பிரச்சனை அடிக்கடி வரும். பொதுவாக, சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றி அதை சிறுநீரோடு வெளியேற்றும். ஒருவேளை இரத்தத்தில் அதிகப்படியான கழிவுகள் இருந்தால், உடல் போதுமான சிறுநீரை உற்பத்தி செய்யாது. ​​​​

இதனால் சிறுநீரகங்களில் படிகங்கள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த படிகங்கள் மற்ற கழிவுகள் மற்றும் இரசாயனங்களை கவர்ந்து ஒரு திடமான பொருளை (சிறுநீரக கல்)உருவாக்குகின்றன. இது உடலில் தாங்க முடியாத அளவிற்கு வலியை ஏற்படுத்தக்கூடியது. இந்த சிறுநீரக கல் உருவாக அப்படி என்ன தான் காரணம்? அதை தடுப்பது எப்படி? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம் தான் காரணம்.. தடுப்பது எப்படி? | How to Prevent Kidney Stones NaturallyRepresentative Image

சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக கற்கள் இருந்தால், உங்களுக்கும் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் இருந்து குணமாகி இருந்தாலும், மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரக கற்கள் உருவாகும். மேலும், வெப்பமான காலநிலையில் வசிப்பவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு சிறுநீரகக் கல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது.

​​​​​​​அதேபோல், அடிக்கடி சிறுநீரை அடிக்கி வைப்பதாலும் கல் உருவாகும்.

​​​​​​​சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை வரலாம். அதாவது, நீரிழிவு நோயிலிருந்து வரும் இன்சுலின் எதிர்ப்பு, சிறுநீரில் கால்சியம் அளவை உயர்த்தி சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. 

​​​​​​​நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும், உணவுமுறை சிறுநீரக கற்களை உருவாக்கும். அவற்றில் முக்கியமானது சர்க்கரை, உப்பு அதிகளவு எடுத்துக்கொள்வது.

​​​​​​​இறைச்சி, முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகள் அதிகளவு எடுத்துக் கொள்வது, உடலில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கலாம். இதுவும் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு மற்றொரு காரணம்.

​​​​​​​​​​​​​​உடல் பருமனும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக்கூடியது. அதாவது, உடல் பருமன் சிறுநீரில் உள்ள அமில அளவை மாற்றி, கல் உருவாவதற்கு வழிவகுக்கும். 

​​​​​​​பாலிசிஸ்டிக் என்று சொல்லக்கூடியய் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கல் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

​​​​​​​​​​​​​​வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ். அதிக அளவு வைட்டமின் சி தொடர்ந்து எடுத்துக்கொள்வது சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை இரட்டிப்பாக்குகிறது. 

சிறுநீரக கல் உண்டாக இதெல்லாம் தான் காரணம்.. தடுப்பது எப்படி? | How to Prevent Kidney Stones NaturallyRepresentative Image

சிறுநீரக கல் வராமல் தடுப்பது எப்படி?

உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் சிறுநீரகக் கற்களைத் தடுக்கலாம்.

நல்ல சிறுநீர் ஓட்டத்தை பராமரிக்க சரியான அளவு தண்ணீர் குடிப்பது. ஒரு நாளைக்கு குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பாக, எப்போது சிறுநீர் வந்தாலும் அடிக்க வைக்காமல் உடனே கழித்துவிட வேண்டும்.

​​​​​​​உணவில் போதுமான அளவு கால்சியம் இருக்க வேண்டும். எனவே, பால், தயிர், பருப்பு, கீரை, ஆரஞ்சு போன்ற கால்சியம் நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

​​​​​​​முடிந்தவரை உணவில் அதிகளவு உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும். 

​​​​​​​மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டாம்.

​​​​​​​பாதாம், வேர்க்கடலை, வெண்ணெய், ப்ளூபெர்ரி போன்ற ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

​​​​​​​தினமும் உடலுக்கு போதுமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் கல் உருவாதைக் குறைக்க முடியும்.

​​​​​​​​​​​​​​இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக கல் ஏற்படுவதை தடுக்க முடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்