Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாம போச்சே.. | Rice Water Benefits in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அரிசி கழுவிய தண்ணீரில் இத்தனை நன்மை இருக்கா? இது தெரியாம போச்சே.. | Rice Water Benefits in TamilRepresentative Image.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான் இந்த அரிசி. அரிசியை சமைத்து சாப்பிடுவதால் நமது பசியை போக்குவதோடு, உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தருகிறது. ஆனால், இந்த அரிசியை ஊறவைத்து கழுவிய தண்ணீரிலும் நன்மைகள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் தான். அட ஆமாங்க! தினமும் இந்த அரிசி கழுவிய தண்ணீரை குடித்து வருவதன் மூலம் செலவே இல்லாமல் நமது உடலில் இருக்கும் பல பிரச்சனைகளை எளிதில் விரட்டியடிக்கலாம். அவை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம். 

தினமும் அரிசி தண்ணீர் குடிப்பதன் பயன்கள்:

அரிசி தண்ணீரை தினமும் குடித்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், நமது சருமம் மற்றும் முடிக்கும் ஏராளமான நன்மைகள் உள்ளன. காரணம், இந்த தண்ணீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் பி, சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

அரிசி தண்ணீர் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு அருமருந்து என்றே சொல்லலாம். எனவே, வெள்ளைப்படுதல் பிரச்சனையால் அவதிபடும் பெண்கள் தினமும் இந்த தண்ணீரில் குடித்து வர விரைவில் பிரச்சனை சரியாகும். 

இதன் குளிர்ச்சி தன்மை சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. உடலில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. கர்ப்பப்பைக்கும் நல்லது கூட.

இந்த தண்ணீரில் இருக்கும் இனோசிட்டால் எனப்படும் சேர்மமம், உடலில் செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பல்வேறு விதமான சரும பிரச்சனைகளை விரட்டியடிக்கும்.

Also Read | சருமம் மற்றும் கேசத்திற்கு வீட்டில் ஊறவைத்த அரிசி நீரைப் பயன்படுத்துவது எப்படி?

அரிசி தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்?

அரிசி தண்ணீருக்கு, வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பு அரிசி போன்ற எந்த அரிசியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பாலிஷ் செய்யப்படாத அரிசியாக இருப்பது நல்லது. மேலும், வேகவைக்கப்படாத, உமி அற்ற அரிசியாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள். 

முதலில் 1 கப் அரிசியை எடுத்து ஒருமுறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், அந்த அரிசியுடன் 4 முதல் 5 டம்பளர் தண்ணீரை ஊற்றி 5 முதல் 6 மணிநேரம் ஊறவிடவும்.

6 மணிநேரத்திற்கு பிறகு அந்த தண்ணீரில் இருக்கும் அரிசியை கைகளால் சிறிது பிசைந்து விடவும். அப்போது தண்ணீரின் நிறம் மேலும் வெண்மை நிறமாக மாறும். 

இப்போது அந்த தண்ணீரை வடிக்கட்டி ஒரு பாட்டிலில் அல்லது கிண்ணத்தில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நாள் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். 

ஆனால், 8 மணி நேரத்திற்கு பிறகு அந்த தண்ணீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால், தண்ணீர் புளித்துவிடும். அது உடலுக்கு நல்லதல்ல.

குறிப்பு: எனெர்ஜி டிரிங்காக இருக்கும் இது பல நன்மைகளை அளித்தாலும், குளிர்ந்த தன்மை கொண்டது. அதனால், இருமல் மற்றும் சளி இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. உங்களுக்குக் குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் கட்டாயம் தவிர்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்