Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,170.45
183.42sensex(0.25%)
நிஃப்டி22,246.95
46.40sensex(0.21%)
USD
81.57
Exclusive

ஓணம் ஸ்பெஷல்.. சுவையான மலபார் அவியல் செய்வது எப்படி? | Malabar Avial Recipe in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஓணம் ஸ்பெஷல்.. சுவையான மலபார் அவியல் செய்வது எப்படி? | Malabar Avial Recipe in TamilRepresentative Image.

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 1/2 கப் 

கத்தரிக்காய் - 2

பீன்ஸ் - 1/2 கப் 

சிகப்பு பூசணி - 1/2 கப் 

வெள்ளை பூசணி - 2 கப் 

துருவிய தேங்காய் - 1 கப் 

முருங்கைக்காய் - 1

கேரட் - 1/2 கப்

அவரைக்காய் - 1/2 கப் 

சேனை கிழங்கு - 1/2 கப் 

கெட்டி தயிர் - 1 கப் 

சீரகம் - 1 ஸ்பூன் 

சின்ன வெங்காயம் - 5 

பச்சை மிளகாய் - 4 

தேங்காய் எண்ணெய் - 1/4 கப் 

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

கருவேப்பிலை - சிறிதளவு

ஓணம் ஸ்பெஷல்.. சுவையான மலபார் அவியல் செய்வது எப்படி? | Malabar Avial Recipe in TamilRepresentative Image

மலபார் அவியல் செய்முறை:

முதலில் எல்லா காய்கறிகளையும் படத்தில் இருப்பதுபோன்று சன்னமாக அரிந்து கொள்ளவும். வாழைக்காய் மற்றும் கத்தரிகாய் இரண்டையும் அதேபோல் நீளவாக்கில் அரிந்து தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். 

இப்போது, அடிகனமான வாணலி அல்லது நான்ஸ்டிக் கடாயை அடிப்பில் வைத்து சூடானதும் அதில் அரிந்து வைத்துள்ள எல்லா காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், அதில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். வெள்ளை பூசணி நிறைய சேர்ப்பதால் அதிலுள்ள தண்ணீரே வேகவைக்க போதுமானது. 

மிதமான தீயில் மூடி வைத்து காய்கறிகளை வேக விடவும். அவ்வப்போது காய்களை குலுக்கி விட்டு வேகவிடவும். பின்னர், புளிக்காத கெட்டித் தயிர் ஒரு கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் சீரகம், 4 பச்சைமிளகாய், 5 சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் 1 கப் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 

10 நிமிடம் கழித்து காய் வெந்து விட்டதா என்று பார்க்க சேனை கிழங்கு, முருங்கைக்காய் இரண்டையும் நசுக்கி பார்க்கலாம் காய்கள் வெந்து விட்டால் கடைந்து வைத்த தயிரை சேர்த்து கலந்துவிட்டு 2 நிமிடம் திறந்துவிட்டு வேக விடவும். காய்களில் தயிரை கலக்கும்போது காய்கள் குழையாமல் மிதமாக கலந்து விடவும்.

2 நிமிடங்கள் கழித்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து பொறுமையாக கலந்துவிடவும். இரண்டு நிமிடம் வரை வேகவைத்து, பிறகு கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் 1/4 கப் சேர்த்து கவனமாக கலந்து மூடி வைத்து விடவும். சுவையான மலபார் அவியல் தயார்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்