Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,170.45
183.42sensex(0.25%)
நிஃப்டி22,246.95
46.40sensex(0.21%)
USD
81.57
Exclusive

எளிமையான முறையில் வயிற்றை சுத்தம் செய்வது எப்படி? | Vayiru Sutham Seivathu Eppadi

Priyanka Hochumin Updated:
எளிமையான முறையில் வயிற்றை சுத்தம் செய்வது எப்படி? | Vayiru Sutham Seivathu Eppadi Representative Image.

மருத்துவ குணம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளாமல், பாஸ்ட் ஃபுட் உணவுகளை தற்போது மக்கள் அதிகம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இதனின் விளைவு சிறு வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட அஜீரணம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய உடனே மருத்துவரை நாடி மருந்து எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வயிற்றின் செயல்பாடு ஆரோக்கியமாக இருந்தாலே போதுமானது. அதற்கு உதவும் வகையில், சில பானங்களை காலையில் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சீரக தண்ணீர்: வயிற்றின் குளிர்ச்சிக்கு உதவும் சீரக தண்ணீரை தினமும் அதிகாலையில் எடுத்து கொள்வது உடலுக்கு நல்லது. இதனால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். தினமும் சீரக தண்ணீர் குடித்தால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.

கற்றாழை சாறு: மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள் தினமும் அதிகாலையில் கற்றாழை சாறு குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில், அதில் இருக்கும் மருத்துவ குணம் வயிறு தொடர்பான தொந்தரவுக்கு சிறந்த தீர்வாக செயல்படுகிறது. இதனால் வயிறு நல்ல சுத்தமாகும், அதோடு அஜீரண கோளாறு மேம்படும்.

அஜ்வைன்/ஓமம் தண்ணீர்: தினமும் அதிகாலையில் ஓமம் தண்ணீர் எடுத்துக்கொள்வதால் வயிற்று வலி, வாயு, அஜீரணம், மலசிக்கல் போன்ற பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வயிறு வீக்கம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. இதனால் வயிற்றில் இருந்து கழிவு வெளியேறி ஆரோக்கியம் மேம்படும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு: தினமும் காலையில் தேனுடன் எலுமிச்சை சாறு குடிப்பது வயிறு சம்மந்தமான தொந்தரவில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். மேலும் இந்த சாறு செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவு எடுத்துக்கொள்வது: கேரட், ஓட்ஸ், பேரிக்காய், பீன்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பருப்பு வகைகளை தினமும் நம்முடைய உணவில் எடுத்துக்கொண்டால் நார்சத்து அதிகாரிக்கும். இதன் மூலம் செரிமான மண்டலம் வலுவடையும். அதோடு வயிறு சம்மந்தமான கோளாறுகள் விலகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்