Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

New Yearல் இந்த ஸ்வீட் செஞ்சு அசத்துங்கள்!

Priyanka Hochumin January 01, 2022 & 13:04 [IST]
 New Yearல் இந்த ஸ்வீட் செஞ்சு அசத்துங்கள்!Representative Image.

எந்த ஒரு நல்ல நாளிலும் ஸ்வீட் சாப்பிடுவது இன்னும் சுவையை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இந்த புத்தாண்டு அன்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஈஸியா எல்லோருக்கும் பிடித்த ஸ்வீட் செய்யவது எப்படி என்று பார்க்கலாம்.

மைசூர் பாகு:

தேவையான பொருட்கள் 1 கப் கடலை மாவு, 2 கப் சர்க்கரை, 1 கப் நெய், 1 சிட்டிகை பேக்கிங் சோடா.

செய்முறை:

கடலை மாவை லேசாக வறுத்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.

கடாய் சூடான பிறகு சர்க்கரையை போட்டு 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு சர்க்கரை கரைந்து கம்பி பதம் வரும் வரை கிண்டவும். 

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவு மற்றும் நெய்யை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். 

பதம் வந்த வுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கிண்டவும்.

பிறகு நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டவும். உங்களுக்கு தேவையான வடிவங்களில் கத்தியை பயன்படுத்தி கட் பண்ணவும். 

மிகவும் சுவையான நாவில் கரையக்கூடிய மைசூர் பாகு ரெடி.

ரவா லட்டு:

தேவையான பொருட்கள் ரவை 1 கப், சக்கரை 3/4 கப், நெய் 100 கிராம், பால் 1 கப், ட்ரை கிரேப்ஸ், முந்திரி மற்றும் ஏலக்காய்

செய்முறை:  

ரவையை பொன்னிறமாக வறுக்கவும். சர்க்கரையை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

ட்ரை கிரேப்ஸ் மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடி செய்து எடுத்துக்கவும். 

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதில் நெய்யை ஊற்றி கிளறவும்.

பிறகு காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உருண்டை பிடித்து வைத்துக்கொள்ளவும்.

ரொம்ப டேஸ்ட்டியான ராவா லட்டு தயார். தினமும் ஒன்று எடுத்துக்கொள்வது உடலுக்கு அவ்ளோ நல்லது. 

பால் பாயாசம்:

தேவையான பொருட்கள் பால் 1 லிட்டர், வறுத்த சேமியா 50 கிராம், ஜவ்வரிசி 50 கிராம், முந்திரி,பாதாம், ட்ரை கிரேப்ஸ்

செய்முறை:

கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி,பாதாம், ட்ரை கிரேப்ஸ் போட்டு நன்றாக வருத்து எடுத்துக்கொள்ளவும்.

ஜவ்வரிசியை நெய்யில் வறுத்து எடுத்துக்கவும். 

பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக வைக்கவும். 

வெந்த பிறகு வறுத்த சேமியாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்பு 3/4 லிட்டர் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.

அதன் பிறகு வாசனைக்காக பொடி செய்த ஏலக்காய் மற்றும் வறுத்த முந்திரி,பாதாம், ட்ரை கிரேப்ஸை கொட்டி கிளறவும்.

1/4 லிட்டர் பாலை ஊற்றி இறக்கி விடவும்.

ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும். நாவிற்கு விருந்தளிக்கும் சூடான பால் பாயசம் தயார்.

மினி பாதுஷா:

தேவையான பொருட்கள் 1 கப் மைதா, 3/4 கப் சக்கரை, 2 tsp நெய்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, பின்பு மைதாவை போட்டு பிசைய வேண்டும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.

அரை மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு சிறு உருண்டைகளாக உள்ளங்கையில் உருட்டி வைத்துக்கொள்ளவும்.

கடாயில் சர்க்கரை எடுத்துக்கொண்டு பின் 1 கப் தண்ணீர் ஊற்றி பாகு தயார் செய்ய வேண்டும்.

இன்னோரு கடாயில் ரிபைண்டு ஆயில் ஊற்றி, சூடான பிறகு உருண்டையை எடுத்து அதன் நடுவில் பெருவிரலை வைத்து அழுத்தி எண்ணெய்யில் போட வேண்டும்.

பின்பு பொன்னிறமாக சிவந்தவுடன் எடுத்து ஆறின பிறகு சர்க்கரை பாகில் போடவும். 

அரை மணி நேரம் ஊறின பின்பு பரிமாறிக்கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்