Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Night Skin Care Routine in Tamil: நைட் தூங்கறதுக்கு முன்னாடி இத பண்ணுங்க.. அப்றம் பாருங்க. வெயில்லயும் உங்க முகம் எவ்ளோ அழகா இருக்கும்னு…

Gowthami Subramani April 27, 2022 & 23:00 [IST]
Night Skin Care Routine in Tamil: நைட் தூங்கறதுக்கு முன்னாடி இத பண்ணுங்க.. அப்றம் பாருங்க. வெயில்லயும் உங்க முகம் எவ்ளோ அழகா இருக்கும்னு…Representative Image.

Night Skin Care Routine in Tamil: என்னதான், நாம் பகலில் அழகாக இருந்தாலும் இரவில் நம் முகம் பொலிவற்றுக் காணப்படும். எந்த நேரமாக இருந்தாலும் சரி, நம் முகத்தின் அழகை நாம் தான் பராமரிக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் அதனைப் பற்றி கவலைப்படுவதற்குக் கூட நம்மிடம் நேரம் இல்லாமல் இருக்கிறது. அழகை பராமரிப்பதற்கு முதலில் உடலுக்கு சரியான நேரமும் தேவை. இவற்றுள் குறிப்பாக இரவு நேரத்தில் தான் சருமத்தைப் பராமரிப்பதற்கான தகுந்த நேரமாக அமையும். நாம் பொதுவாக இயற்கையான முறையில் அழகைப் பராமரித்து வந்தால் எந்த விதமான பாதிப்புகளும் எப்போதும் ஏற்படாது. மேலும் முகத்தைப் பராமரிப்பதுடன் இளமையைத் தக்க வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது. ஒரே இரவில், தமது சருமத்தை ஜொலிக்க வைக்க இங்கே சூப்பரான மெதேட்ஸ் இருக்கு. இவை அனைத்தையும் பெற்று நீங்கள் பயன் பெறலாம்.

முறை 1

சிறிய பாத்திரம் ஒன்றில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் போன்றவற்றை கலந்து அதில் சிறிதளவு லெமன் சேர்க்கவும். இதனை மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். மேலும், முகத்தை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் உங்கள் முகம் பளிச்சென்று இருப்பதை உணர்வீர்கள்.  இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம். இதன் மூலம் உங்கள் முகம் அருமையாக ஜொலிக்கும்.

முறை 2

நம் எல்லோரும் அறிந்த ஒன்று இயற்கை பொருள்களின் மூலமாக முகத்தை அழகுறச் செய்தால், எத்தகைய விளைவுகளும் நேரிடாது என்பது. அந்த வகையில் ஒன்று தான் கற்றாழை. இந்த கற்றாழையால் ஏகப்பட்ட பலன்கள் இருக்கின்றன. இது மிகவும் குளிர்ச்சியான ஒன்றாகும். இரவில் தூங்குவதற்கு முன்பு, இதனை பேஸ் பேக் செய்வது போல, இவற்றின் ஜெல்லை எடுத்து முகத்தில் தடவிக் கொண்டால், முகத்திற்கு ஒருநல்ல பொழிவைத் தரும். இது போன்று வாரம் மூன்று முறை முதல் நான்கு முறை செய்தால், சருமம் மென்மையாக மாறக்கூடும்.

தையும் படிக்க: சுட்டெரிக்கும் வெயில்லயும் கலரா இருக்கனும்னு ஆசையா? அப்ப இத ஃபாலோப் பண்ணுங்க.

இது போன்ற இன்னும் சில பேஸ்பேக் முறைகளின் மூலம் நம் முகத்தை ஜொலிக்க வைக்கலாம். சருமத்தை மென்மையாக்கவும், அதனை பொலிவாக்கவும் நாம் இயற்கையான முறையைப் பயன்படுத்தினால், எந்த வகையான பக்க விளைவுகளும் ஏற்படாது. இந்த முறையைப் பயன்படுத்தினால், நீண்ட காலத்திற்கு நமது அழகும், தோற்றமும் பொலிவுடன் இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளி செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்