Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர் காலத்தில சுவைத்து சாப்பிட ஈஸியான ரெசிப்பீஸ்!

Priyanka Hochumin December 28, 2021 & 16:38 [IST]
 குளிர் காலத்தில சுவைத்து சாப்பிட ஈஸியான ரெசிப்பீஸ்!Representative Image.

பொதுவாக குளிர்காலம் என்றாலே மக்கள் அனைவரும் சூடான உணவை உண்ண வேண்டும் என்று பிரியபடுவார்கள். அதை உண்ணும் போது நமக்கு கதகதப்பான உணர்வை அளிக்கும். அது சுவையாக மட்டுமில்லாமல் உடலுக்கு சத்தானதாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். நாம் வகைவகையாக உட்கொள்ள 5 சூப்பின் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பின் நன்மைகள்:

1.உடலுக்கு மிகவும் நல்லது.

2. சுலபமான செய்முறை.

3. உடல் நீரேற்றத்தை பராமரிக்கும்.

4. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

1. பீட்ரூட் கேரட் சூப்:

இந்த சுவையான மற்றும் சத்தான சூப்பை செய்ய தேவையான பொருட்கள் 

பீட்ரூட், கேரட், தண்ணீர், பூண்டு, மிளகு, கிரீன் ஆனியன், இஞ்சி 

செய்முறை:

  • பிரஷர் குக்கரில் 2 மீடியம் பீட்ரூட் மற்றும் 3 மீடியம் கேரட்டை தண்ணீரில் வேகவைக்க வேண்டும். வெந்து முடிந்தவுடன் கைகளை பயன்படுத்தி அதை நன்கு மசிய செய்ய வேண்டும்.
  • அடுத்தபடியாக, கடாய் நன்கு சூடான பிறகு 2 பட்டர் க்யூப்ஸை சேர்த்துக்கொள்ளவும்.
  •  அதில் 6 பூண்டு, 6-7 மிளகு, 2 ஸ்பிரிங் கிரீன் ஆனியன் ஆகியவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  •  நன்கு வதங்கின பிறகு 1 tsp இஞ்சி பேஸ்ட், மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை  சேர்க்கவும். 
  • இந்த கலவை தயாரானதும் மசித்து வைத்த சூப் காய்களை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் சிம்மில் கொதிக்க வைக்கவேண்டும். 
  • இப்போது சூப் ரெடி. அதன் மேல் சிறிது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.  

                           

2. சிக்பீ ஓட்ஸ் சூப்:

இதற்கு தேவையான பொருட்கள் கொண்டைக்கடலை, பீட்ரூட், இஞ்சி, பட்டை, தக்காளி, வெங்காயம், பூண்டு மற்றும் பச்சைமிளகாய்.

செய்முறை:

  • கொண்டைக்கடலையை ஊறவைக்க வேண்டும். பின் பிரஷர் குக்கரில் தக்காளி, பீட்ரூட், இஞ்சி, பட்டை மற்றும் ஊறவைத்த கொண்டைக்கடலை சேர்த்து வேக வைக்க வேண்டும். 
  • நன்கு வெந்த பிறகு அதை மசித்து ஆற வைக்கவும்.
  • கடாய் சூடான பிறகு ஆலிவ் ஆயிலை ஊற்றவும். அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், 1/4 கப் ஓட்ஸ் மற்றும் மசித்த கொண்டைக்கடலை கலவை சேர்த்து சிம்மில் கொதிக்க வைக்கவும்.
  • கொத்தமல்லி தூள், மிளகு தூள், சிறிது அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும்.
  • சுவையான மற்றும் சூடான சிக்பீ ஓட்ஸ் சூப் ரெடி.

3. கார்லிக் ப்ரோக்கோலி சூப்:

இந்த நார்சத்து மிகுந்த சூப்பை செய்ய தேவையான பொருட்கள் ப்ரோக்கோலி, ஸ்பினாச், பூண்டு, இஞ்சி பேஸ்ட், கிரீன் ஆனியன் மற்றும் ஓட்ஸ்.

செய்முறை:

  • குக்கரில் 1 முழு ப்ரோக்கோலி மற்றும் 2 கப் ஸ்பினாசை வேக வைக்கவும். 
  • கடாயில் 2 tsp பட்டர் சேர்த்து அதில் மிளகு, 6-8 பூண்டு துண்டுகள், 1 tsp இஞ்சி பேஸ்ட் மற்றும் நறுக்கிவைத்த கிரீன் ஆனியன்  ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 
  • வதங்கின பிறகு குக்கரில் வேகவைத்த ப்ரோக்கோலி, ஸ்பினாசை சேர்க்கவும். மேலும் 1/2 கப் ஓட்ஸ், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிண்டிவிடவும்.
  • ஆறவைத்த பின் நன்கு மசித்து பரிமாறவும்.

                            

4. லென்டில்ஸ் பார்லி சூப்:

பருப்பை கொண்டு வித்தியாசமாக சாப்பிட நினைத்தால் இது ஒரு பெஸ்ட் சாய்ஸ். இதை செய்ய தேவையான பொருட்கள் மூங் பருப்பு, பார்லி, சிக்கன் மற்றும் பூண்டு.

செய்முறை:

  • 1 கப் மூங் பருப்பை, 1/2 கப் பார்லேவுடன் தண்ணீரில் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பின்பு அதை மசித்து வைத்துக்கொள்ளவும்.
  • கடாயில் பட்டர், பூண்டு, சிக்கன் க்யூப்ஸ் சேர்த்து வதக்கவும்.   
  • வதங்கின பிறகு மசித்த கலவையை சேர்க்கவும். அதில் மிளகு தூள், உப்பு சேர்த்து சூப்பின் சுவையை மேம்படுத்தவும். 
  • இது கண்டிப்பாக சுவைத்து பார்க்க வேண்டிய உணவு.

                                

5.கேரட் பீன் சூப்:

வித்யாசமான முறையில் கேரட் மற்றும் பீன்ஸை சுவைத்து சாப்பிட இந்த ரெஸிப்பியை ட்ரை பண்ணலாம்.

அதற்கு தேவையான பொருட்கள் கேரட், தட்டை பயிறு, வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டுப் பேஸ்ட்.

செய்முறை:

  • 4 கேரட், 1 கப் தட்டை பயிறு குக்கரில் வேகவைத்து எடுத்து மசித்து வைக்க வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சுவைக்காக வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
  • நன்கு வதங்கின பிறகு காலிஃபிளவர், காளான், மசித்த கேரட் பீன் கலவை சேர்த்து கிண்டவும்.
  • கடைசியில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து இறக்கவும். 
  • சூடான காரமான கேரட் பீன் சூப் ரெடி.

                               


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்