Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Split Hair Removal Methods: இந்த வெயிலுக்கு முடி ரொம்ப வெடிக்குதா..? இத பண்ணுங்க. முடி வெடிச்சதும் நல்லானது மட்டுமல்லாம அதிகமாக வளரும்….!

Gowthami Subramani May 09, 2022 & 22:10 [IST]
Split Hair Removal Methods: இந்த வெயிலுக்கு முடி ரொம்ப வெடிக்குதா..? இத பண்ணுங்க. முடி வெடிச்சதும் நல்லானது மட்டுமல்லாம அதிகமாக வளரும்….!Representative Image.

Split Hair Removal Methods: ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் ஆசை அழகாக இருக்க வேண்டும் என்பது. அதிலும் குறிப்பாக, முடி கருப்பாக இருக்க வேண்டும், நீளமாக மற்றும் மொத்தமாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் ஓர் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக, இப்போது எல்லாம் காலநிலை மாற்றத்தின் காரணமாக முடி பிளவுகள் ஏற்படுவதோடு நுனி முடி வெடிப்புகளுடன் காணப்படும். இது போன்ற பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது இன்றும் பலரும் அறியாத உண்மையாகவே உள்ளன. இது மட்டுமல்லாமல், இப்போது இருக்கும் டெக்னாலஜியில் ஹேர் ஸ்ட்ரெய்ட்னிங், கலரிங், ப்ளீச்சிங் போன்றவற்றை செய்து கொள்கின்றனர். அழகாக இருப்பதற்காக கூந்தலை வைத்து செய்யும் இந்த முறைகளால் முடி கொட்டுதல், முடி பிளவு, வெடிப்பு போன்ற பல்வேறு வகையான விளைவுகள் ஏற்படும்.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ் செய்தால், முடி ஈரப்பதத்துடன் காணப்படும். இதற்கு ஒரு சிறந்த முறையாக ஆயில் மசாஜ் சிறப்பாக இருக்கும். இதற்கு, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தேவையான அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். முடியின் நீளத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் எடுத்துக் கொண்டு அதனை இளஞ்சூடாக ஆக மாற்றி ஒரு அகலமான கிண்ணத்தில் வைத்து காட்டன் பஞ்சு உருண்டையில் நனைத்து முடியில் தடவவும்.

அதன் பிறகு, 15 முதல் 20 நிமிடங்கள் வரை கூந்தலை மைல்டான ஷாம்பு கொண்டு முடியை அலாச வேண்டும். அதன் பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷாம்பு பயன்படுத்தாதவர்கள் ஆயில் தெரபி எடுத்து சீயக்காயைப் பயன்படுத்துவர். இது போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் பிளவு அடையாமல் இருக்கும்.

பிரவுன் நிறத்தை மாற்றும் எண்ணெய்

கருப்பு நிறத்தில் முடி இருக்க வேண்டும் என்பது பெண்களின் இயற்கையான குணம். இதனைப் பெற நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் 1 டீஸ்பூன், பாதாம் எண்ணெயை 2-டீஸ்பூன் என்ற அளவில் எடுத்துக் கொண்டு அதனை வெதுவெதுப்பாகச் சூடு செய்யவும். இதனைக் கூந்தலில் தடவினால், அருமையான ரிசல்ட் கிடைக்கும்.

எண்ணெய் கடைகளில் கறிவேப்பிலை எண்ணெய் கிடைக்கும். இதை வாங்கி தலையில் மசாஜ் செய்தால், முடி சூப்பராக இருக்கும். இவ்வாறு பயன்படுத்தினால், முடி கருப்பாவதுடன் செம்பட்டையாவதைத் தவிர்க்கலாம். இதன் மூலம், கூந்தலில் கருமையைப் பாதுகாக்கலாம்.

பிளவு முடியைத் தவிர்க்க

தினசரி வழக்கத்தில் ஸ்பா சிகிச்சை அல்லது ஆயில் மசாஜ் செய்தால் முடி பிளவு ஆவதைத் தவிர்க்கலாம். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டும். இதற்கான முக்கிய காரணம், ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கலாம். அதற்கு ஏற்ற சத்தான உணவுப் பொருள்களை உண்பதன் மூலம், முடியின் பலவீனத்தைக் குறைக்கலாம்.

சரியான பராமரிப்பு, ஊட்டச்சத்து போன்ற இரண்டுமே கூந்தலில் பிளவை அதிகரிக்காமல் கூந்தலைக் கருப்பாக்கவும், வலிமையுடனும் இருக்க உதவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்