Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐசிசி ODI உலகக்கோப்பை போட்டி வேறு நாட்டுக்கு மாற்றம்..? பாகிஸ்தானால் சிக்கலா..?

Sekar Updated:
ஐசிசி ODI உலகக்கோப்பை போட்டி வேறு நாட்டுக்கு மாற்றம்..? பாகிஸ்தானால் சிக்கலா..?Representative Image.

நாடுகளுக்கிடையே உள்ள மோதல் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையேயும் சுமூகமான உறவு இல்லை. 

2023ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டிக்காக இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏசிசி (ஆசிய கிரிக்கெட் கவுன்சில்) தலைவரும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா வெளிப்படுத்தியதில் இருந்து, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே விரிசல் அதிகரித்தது. 

இதற்குப் பதிலளித்த பிசிபி, பிசிசிஐ பாகிஸ்தானில் நடக்க உள்ள 2023 ஆசிய கோப்பையை புறக்கணித்தால், 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் விளையாட திட்டமிடப்பட்டுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக அச்சுறுத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு

2023 உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பையைச் சுற்றி நடக்கும் வாத பிரதிவாதங்களை மத்தியில், பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு பிரச்சினையைத் தீர்க்க போதுமான அளவு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். 

இது ஒரு புறம் இருக்க, இந்தியாவின் ஹோஸ்டிங் உரிமைகளைப் பொருத்தவரை வரி தொடர்பான விஷயத்தில் மிகவும் சிக்கலான சில விஷயங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வரி தொடர்பான சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படாவிட்டால், உலகக் கோப்பையை இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுவதைத் தவிர ஐசிசிக்கு வேறு வழியில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

என்ன சிக்கல்?

2016 ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் நிர்வாகக் குழுவான ஐசிசி, இந்திய வரி அதிகாரிகளிடமிருந்து இடைக்கால வரிச் சலுகையைப் பெற்ற பின்னரே உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்த முடிந்தது. ஐசிசி பிசிசிஐ'யின் வருவாய் பங்கில் இருந்து 10.3% கூடுதல் கட்டணத்தை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது மற்றும் பிசிசிஐ அதற்காக இப்போது சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. 

2023 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, ஐசிசி மற்றொரு இடைக்கால வரி உத்தரவைப் பெற முடிந்தது. ஆனால் பிசிசிஐ இதனால் மிகவும் அதிருப்தியில் உள்ளதாக இப்போது கூறப்படுகிறது. ஐசிசியும் பிசிசிஐயிடம் தேவையான வரித் தீர்வுகளை வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது. 

ஐசிசியின் கொள்கைகள்

தொடரை நடத்தும் நாட்டின் கிரிக்கெட் வாரியம் அந்தந்த அரசாங்கங்களிடமிருந்து தேவையான அனைத்து வரி விலக்குகளையும் பெறுவது ஐசிசி கொள்கைகளில் உள்ளது. இது தொடர்பாக எதுவும் செய்ய முடியாது என கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

2016 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் எந்தவிதமான வரி விலக்குகளையும் மறுத்துவிட்டது. இதனால் பிசிசிஐ தனது வருவாயில் 190 கோடி ரூபாயை இழந்தது. இது பிசிசிஐ'யின் வருவாய் பங்கிலிருந்து ஐசிசியால் எடுத்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்