Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாரபட்சம் காட்டும் பிசிசிஐ.. சர்ஃபராஸ், அபிமன்யூ ஈஸ்வரன், ஹனுமா விஹாரி.. தேர்வு செய்யாததற்கு என்ன காரணம்?

Iravaadhan Updated:
பாரபட்சம் காட்டும் பிசிசிஐ.. சர்ஃபராஸ், அபிமன்யூ ஈஸ்வரன், ஹனுமா விஹாரி.. தேர்வு செய்யாததற்கு என்ன காரணம்?Representative Image.

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், சர்ப்ராஸ் கான், பிரியங்க் பஞ்சால், ஹனுமா விஹாரி உள்ளிட்ட ஒருவருக்கு கூட பிசிசிஐ வாய்ப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் தொடர்ந்து இந்திய அணி இரண்டு முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. புஜாராவை அனுப்பிவிட்டு ஹனுமா விகாரி, ரஹானேவுக்கு பதில் சர்ப்ராஸ் கான், பேக் அப் தொடக்க வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்ட ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிசிசிஐ தரப்பில் புஜாராவை நீக்கிவிட்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரை தேர்வு செய்துள்ளது. ருதுராஜ் திறமையான வீரர் என்றாலும் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அவரின் செயல்பாடுகள் மோசமாகவே உள்ளது. ஐபிஎல், விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் தான் சிறப்பாக விளையாடி செயல்பட்டிருக்கிறார். ஆனால் ஹனுமா விகாரியோ காயத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி காத்து நின்றிருக்கிறார்.

அதேபோல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்திருக்கும் சர்ப்ஃராஸ் கானுக்கு இம்முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு நடுவரசையில் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் பிசிசிஐ தேர்வுக்குழு அவரையும் நிராகரித்திருக்கிறது. இதேபோன்று ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் தேர்வு குழு வாய்ப்பு வழங்கவில்லை.

வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகிய போது, மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த அளவிற்கு ரஞ்சி கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனைகளை படைத்திருக்கிறார். இதனால் ரஞ்சி கிரிக்கெட் விட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தான் வாய்ப்பு தரப்படுகிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்