Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் மட்டுமே வழி: அபினவ் முகுந்த்!

Iravaadhan Updated:
இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் மட்டுமே வழி: அபினவ் முகுந்த்!Representative Image.

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் மட்டுமே வழி: அபினவ் முகுந்த்!Representative Image

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சர்ஃப்ராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் உள்ளிட்டோர் அதிக ரன்களை விளாசி நீண்ட நாட்களாக இந்திய அணியின் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதனால் விரக்தியடைந்த தமிழக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்துள்ளதை புரிந்துகொள்ள முடியவில்லை. இனி ஒரு இளம் வீரர் தனது மாநில அணிக்காக ஆடுவதினால் பெருமை கொள்வதற்கு எந்த ஊக்கனும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் விரைவாக இடம்பிடிக்க இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் புதிய வழியாக அமைதுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்