Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி அப்படி என்ன செய்துள்ளார்? : அஸ்வின் விளக்கம்!

Iravaadhan Updated:
இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி அப்படி என்ன செய்துள்ளார்? : அஸ்வின் விளக்கம்!Representative Image.

திண்டுக்கல்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். அதேபோல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களுக்கு நிச்சயம் விரக்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். அதனை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் உடனடியாக இந்திய அணியில் இருந்து சில வீரர்களை நீக்க வேண்டும் என்று சொல்வது நியாயமல்ல. ஏனென்றால் வீரர்களின் ஆட்டம் ஒருநாள் இரவில் மாறாது.  அதேபோல் இந்திய அணியின் தோல்விக்கு பின் எம்எஸ் தோனியின் கேப்டன்சி குறித்த பேச்சுகள் அதிகமாகியது. தோனியை போன்ற ஒரு கேப்டன் கிடைக்க மாட்டார் என்று பலரும் பேசினார்கள். தோனி என்ன செய்தார் தெரியுமா? அவர் அனைத்து விஷயங்களையும் எளிதாக மாற்றிக் கொண்டார்.

நான் எம்எஸ் தோனியின் கேப்டன்சிக்கு கீழ் ஆடிய போது, ஒன்றை மட்டும் நன்றாக கவனித்திருக்கிறேன். அவர் வழக்கமாக 15 பேர் கொண்டு இந்திய அணியை தேர்வு செய்வார். அந்த 15 பேர் கொண்ட அணியே ஒரு ஆண்டுக்கு தொடர்ச்சியாக விளையாடும். ஒவ்வொரு வீரருக்கும் பாதுகாப்பான சூழலை தோனியால் கொண்டு வர முடிந்தது.

ஒரு வீரரை தேர்வு செய்து, இதுதான் உன் வேலை என்று ஒரு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் போது, நிச்சயமாக அந்த விளையாட்டு வீரர் ஒவ்வொரு போட்டிக்கும் மேம்பட்டு கேப்டனின் நம்பிக்கை காப்பாற்ற முயற்சிப்பார். அதனைதான் தோனி தொடர்ச்சியாக செய்தார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்