Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AUS vs ZIM, 3rd ODI : அரண்டு போன ஆஸ்திரேலியா.. தாண்டவமாடிய ஜிம்பாப்வே.. வேற லெவல் ஆட்டம்!!

Sekar September 03, 2022 & 18:22 [IST]
AUS vs ZIM, 3rd ODI : அரண்டு போன ஆஸ்திரேலியா.. தாண்டவமாடிய ஜிம்பாப்வே.. வேற லெவல் ஆட்டம்!!Representative Image.

AUS vs ZIM, 3rd ODI : திடீர் மாற்றமாக, தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி அசர வைத்துள்ளது. 

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையுடன் மூன்றாவது ஆட்டத்தில் நுழைந்தது மற்றும் கடைசி போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதற்கு முன், கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் இது தான் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார். வார்னர் சமீபத்தில் ஒரு மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆரோன் ஃபின்சுடன் இணைந்து தொடங்கினார். 

எப்போதும் போல, ஃபின்ச் சொதப்பி 11 பந்துகளை எதிர்கொண்டு 5 ரன்களில் வெளியேறினார். இதனால் டேவிட் வார்னர் மறுமுனையில் சிக்கித் தவித்தார். எனினும் டேவிட் வார்னர் 96 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார் மற்றும் 97.92 ஸ்ட்ரைக் ரேட்டுடன், வார்னர் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்தார். எனினும் சதத்தை தவறவிட்டு 94 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

டேவிட் வார்னரைத் தவிர ஸ்டீவன் ஸ்மித் உட்பட வேறு எந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனும் 20 ரன்களைக் கடக்க முடியவில்லை. கேரி 9 பந்துகளில் 4 ரன்களையும், ஸ்டோனிஸ் 15 பந்துகளில் 3 ரன்களையும், கேமரூன் கிரீனும் 11 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களில் சீன் வில்லியம்ஸிடம் பலியாகினர். 

இறுதியில் ஆஸ்திரேலியா 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு சுருண்டது. ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஜிம்பாப்வே பேட்டிங் செய்ய வந்தபோது, ​​​​அவர்கள் இலக்கை மிக எளிதாக துரத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மறுபுறம், ஆஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு வழி தான் இருந்தது. அது இலக்கை எட்டும் முன் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது தான். 

ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர் தகுத்ஸ்வனாஷே கைடானோ 19 ரன்களில் ஹேசில்வுட்டால் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் தடிவானாஷே மருமணி தொடர்ந்து ஆடி 47 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஜிம்பாப்வே 115/6 என்ற நிலையில் தத்தளித்தது. எனினும் கேப்டன் ரெஜிஸ் சகப்வா கடைசி வரை பொறுமையாக இருந்து ஜிம்பாப்வே அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்