Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போடு தகிட தகிட.. உலகக்கோப்பைக்கு முன் புது ஜெர்சியில் இந்திய கிரிக்கெட் அணி!!

Sekar September 19, 2022 & 11:19 [IST]
போடு தகிட தகிட.. உலகக்கோப்பைக்கு முன் புது ஜெர்சியில் இந்திய கிரிக்கெட் அணி!!Representative Image.

வரும் 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பைக்கு முன்னதாக நடக்க உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களிலும் இந்திய வீரர்கள் இதே ஜெர்சியை அணிய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சர் எம்பிஎல் மூலம் புதிய ஜெர்சி விரைவில் வெளியிடப்படும் என்று உயர்மட்ட குழு சுட்டிக்காட்டியிருந்தது. இதனால் புதிய ஜெர்சி எப்போது வெளியிடப்படும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

2022 ஆசியக் கோப்பையின் போது இருந்த இந்திய அணியின் ஜெர்சியுடன் ஒப்பிடும்போது, ​​புதிய கிட் 2007 டி20 உலகக் கோப்பையில் இருந்ததைப் போலவே, லேசான நீல நிறத்தைக் கொண்டுள்ளது. 

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மொஹாலியில் நாளை தொடங்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்