Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடரை ஜெயிச்சே ஆகணும்.. புது ஸ்கெட்சுடன் களமிறங்கும் பாண்டியா படை?

Sekar Updated:
தொடரை ஜெயிச்சே ஆகணும்.. புது ஸ்கெட்சுடன் களமிறங்கும் பாண்டியா படை?Representative Image.

இந்தியா-இலங்கை இடையேயான டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனில் உள்ள நிலையில், இன்று நடக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி தொடரைக் கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்க உள்ளது. 

முதல் டி20ஐ இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 2வது ஆட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், ஹர்திக் தலைமையிலான அணி தொடரை வெல்ல இன்று புதிய வியூகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

டாப் ஆர்டர்

ஷுப்மான் கில் முதல் இரண்டு போட்டிகளிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாத நிலையில், அவருக்கு பதிலாக உள்நாட்டு போட்டிகளில் விளையாடி பயங்கர ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டை டாப் ஆர்டரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வாய்ப்புள்ளது. 

இஷான் கிஷன் நல்ல பார்மில் இருப்பதால், அவர் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வார். மேலும் ராகுல் திரிபாதி 2வது போட்டியில் தான் அறிமுகமானார். அவருக்கு மேலும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர் ஒன் டவுனாக தொடர்ந்து களமிறக்கப்படலாம்.

மிடில் ஆர்டர்

கடந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்களை அடித்தார். அவர் இல்லையென்றாலும், அவருக்கு பதிலாக அணியில் மாற்று வீரர் யாரும் இல்லை. தீபக் ஹூடா பந்துவீசவில்லை, ஆனால் அவர் முதலாவது ஆட்டத்தில் 43 ரன்கள் குவித்தார். மேலும் அவர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார். ஹர்திக் கேப்டன் என்பதால் அவர் நிச்சயம் இருப்பார்.

சுழல் ஆல்ரவுண்டர்

அக்சர் முதல் இரண்டு ஆட்டங்களில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். முதலாவது டி20யில் 31(20) ரன்களை குவித்த அவர், 2வது ஆட்டத்தில் 65(31) ரன்கள் எடுத்தார். அவரது பந்துவீச்சு திறமை ஒருபோதும் கேள்விக்குள்ளானது இல்லை. இப்போது, அணியில் உள்ள மிகவும் மதிப்புமிக்க இந்திய வீரர்களில் ஒருவராக மாறிவிட்டார்.

பந்துவீச்சு

சிவம் மாவி எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதால், அவருக்கு பதிலாக முகேஷ் குமாருக்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் இந்த போட்டியில் தக்கவைக்கப்படுவார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் அணியில் தக்கவைப்படுவது உறுதி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்