Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விளையாண்டது போதும்.. முடிச்சிக்கலாம்.. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு!!

Sekar Updated:
விளையாண்டது போதும்.. முடிச்சிக்கலாம்.. பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் ஓய்வு அறிவிப்பு!!Representative Image.

கடந்த ஆண்டு இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப்பை வெல்ல சர்ரே அணிக்கு உதவிய தென்னாப்பிரிக்க பேட்டிங் ஜாம்பவான் ஹாஷிம் ஆம்லா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

39 வயதான அவர் ஏற்கனவே 2019 இல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

2004-2019 வரையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக அம்லா 18,672 ரன்கள் எடுத்தார். மேலும் ஜாக் காலிஸுக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது அதிக டெஸ்ட் ரன் எடுத்தவர் என்ற சிறப்பையும் ஆம்லா கொண்டுள்ளார்.

ஜூலை 2012 இல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 311 நாட் அவுட் என்பது ஆம்லாவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக உள்ளது.

2019க்கு பிறகு லீக் போட்டிகள் மற்றும் கவுண்டி கிரிக்கெட்டுகளில் மட்டும் விளையாடி வந்த ஆம்லா தற்போது அதிலிருந்தும் விடை பெற்றுள்ளார். ஓய்வு அறிவிப்பு குறித்து சர்ரே கவுண்டி அணியின் வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், "எனக்கு ஓவல் மைதானத்தைப் பற்றிய சிறந்த நினைவுகள் உள்ளன. இறுதியாக அதை ஒரு வீரராக விட்டுச் செல்வது, என்ன நடந்தது என்பதற்கான மகத்தான நன்றியுடன் என்னை முழுமை அடைய செய்கிறது." என்று தெரிவித்தார்.

சர்ரே கிரிக்கெட் இயக்குநரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான அலெக் ஸ்டீவர்ட், ஆம்லா ஒரு உண்மையான தொழில்முறை வீரர் என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்