Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் சூர்யகுமார் யாதவ்.. 40 இடங்கள் ஜம்ப் அடித்த தீபக் ஹூடா!!

Sekar Updated:
தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் சூர்யகுமார் யாதவ்.. 40 இடங்கள் ஜம்ப் அடித்த தீபக் ஹூடா!!Representative Image.

இன்று வெளியாகியுள்ள புதுப்பிக்கப்பட்ட ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 10 இடங்கள் முன்னேறி 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வான்கடே ஸ்டேடியம் ஆடுகளத்தில் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷன் 37 ரன்களை எடுத்திருந்தார். இந்த போட்டியில் தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 40 இடங்கள் முன்னேறி முதல் 100 இடங்களுக்குள் வந்து, 97வது இடத்தில் உள்ளார்.

அதே சமயம் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தவிர எந்த இந்திய பேட்டரும் முதல் 10 இடங்களுக்குள் இல்லை. மூத்த வீரரான விராட் கோலி 13 வது இடத்தில் உள்ள இரண்டாவது இந்திய வீரர் ஆவார்.

Also Read : இந்தியா vs இலங்கை டி20: பாண்டியா செய்த இரண்டு அதிரடி மாற்றங்கள்..? புதிய பிளேயிங் லெவன்..??

இலங்கை தொடருக்கு தேர்வு செய்யப்படாத கே.எல்.ராகுல், 20வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா 21வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 76வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் கேப்டன் ஹர்திக் 3வது இடத்தைப் பிடித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்