Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டி20 முழு நேர கேப்டன்ஷிப்.. ஹர்திக் பாண்டியாவுக்கு புத்தாண்டு பரிசு?

Sekar Updated:
டி20 முழு நேர கேப்டன்ஷிப்.. ஹர்திக் பாண்டியாவுக்கு புத்தாண்டு பரிசு?Representative Image.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, 2022-ம் ஆண்டு பல தோல்விகளை பெற்றிருந்தாலும், இறுதியில் அபார வெற்றியுடன் முடித்துள்ளது. 

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், 2011இல் தோனி தலைமையில் கோப்பையை வென்ற பிறகு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் 2023இல் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணியினர் முழுமையாக தயாராக வேண்டிய நேரம் இது.

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை இந்தியாவுக்கு வருகை தரவுள்ளது. தொடரின் முதல் போட்டி ஜனவரி 3, 2023 அன்று நடைபெறும். ஆசிய கோப்பை சாம்பியன்களான இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் அணியை அறிவிக்கவில்லை. 

பிசிசிஐ வட்டார அறிக்கைகளின்படி, டிசம்பர் 27, 2022 அன்று அணி அறிவிக்கப்படலாம். சுவாரஸ்யமாக, 2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நீக்கப்பட்ட சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவே, மீண்டும் அணியைத் தேர்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வுக் குழு அமைக்கப்படாதததால், தற்காலிக நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது.

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டுவிட்டதாகவும், அவர்கள் இந்தத் தொடருக்குத் திரும்வுவார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கைகளில் மட்டுமே உள்ளது. அவர்கள் தான் இதில் இறுதி முடிவை எடுப்பார்கள். 

தேசிய கிரிக்கெட் அகாடமி அவர்களுக்கு உடற்தகுதி சான்றிதழ்களை வழங்கினால், அவர்கள் நிச்சயமாக இந்திய அணியில் இடம் பெறுவார்கள். 

இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டி20 போட்டிகளில் இளம் ரத்தம் பாய்ச்சுவதோடு ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவலும் வந்த வண்ணம் உள்ளன. 2024இல் அடுத்த டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், ஐபிஎல்லில் முதல் முறையாக கேப்டனாக களமிறங்கி குஜராத் அணியை வெற்றி பெறச் செய்து ஹர்திக் பாண்டியா அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு புத்தாண்டு பரிசாக டி20 அணியின் நிரந்தர கேப்டன் பொறுப்பும் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வங்கதேச தொடரின்போது காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் சர்மா இலங்கை தொடரில் பங்கேற்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்