Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ISSK Junior World cup Suhl 2022: பதங்களைத் தட்டி தூக்கிய இந்திய வீரர்கள்.! உற்சாகத்தில் திளைக்கும் பாரதம்....! 

Manoj Krishnamoorthi May 22, 2022 & 12:00 [IST]
ISSK Junior World cup Suhl 2022: பதங்களைத் தட்டி தூக்கிய இந்திய வீரர்கள்.! உற்சாகத்தில் திளைக்கும் பாரதம்....! Representative Image.

ISSF ஜூனியர் உலகக் கோப்பை 2022 இல் வாகைசூடி கடந்த வாரம் பதக்கங்களுடன்  துப்பாக்கி சுடும்  இந்திய வீரர்கள் வந்தனர். 2022 ISSF ஜூனியர் உலகக் கோப்பையில்  இந்திய ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் அணி  முதல் இடத்தையும் இத்தாலி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. முதல் இடத்தைப் பிடித்த இந்தியா 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 33 பதக்கங்களை வென்றது.

முன்னதாக சென்ற புதன்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து, சமீர் ஜோடி 17-1 என்ற புள்ளி கணக்கில்தாய்லாந்தின் வேஸ்டர் வாரகோர்ன் காங்லாங், வச்சிரவிட் புவாங்தோங், தனாவிட் க்ருவாங்கேவ் ஆகியோரை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றனர். அதைத் தொடர்ந்து இந்தியா சேர்ந்த சிம்ரன்ப்ரீத் கவுர் ப்ரார் மற்றும் விஜய்வீர் சித்து ( 25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணி)  17-9 என்ற கணக்கில் கலப்பு அணியில் சகஇந்தியவீரர்களான அனிஷ் பன்வாலா மற்றும் தேஜஸ்வானியைத் தோற்கடித்து  இறுதிப் போட்டியில் தங்கம் வென்றனர்.

இவ்வாறு இந்திய அணி 13 தங்கங்களை வென்று 4 தங்கங்களை வென்ற இத்தாலி இரண்டாம் இடத்துக்குத் தள்ளியது, மேலும் 13 தங்கப் பதங்களை வென்ற இந்திய வீரர்களின் பெயர் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் வென்ற வீரர்கள்:

S.NO

வீரர்கள்

அணி

1

சிம்ரன்ப்ரீத் கவுர் ப்ரார், விஜய்வீர் சித்து

25 மீ ரேபிட் ஃபயர் பிஸ்டல் கலப்பு அணி

 

2

அனிஷ் பன்வாலா, விஜய்வீர் சித்து மற்றும் சமீர்

ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் அணி

 

3

மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் 

பெண்கள் 25 மீ பிஸ்டல் அணி

 

4

சிஃப்ட் கவுர் சாம்ரா 

பெண்களுக்கான 50மீ ரைபிள் 3 நிலைகள் (தனிநபர்)

5

ரிதம் சங்வான் 

பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் (தனிநபர்)

 

6

ருத்ராங்க்ஷ் பாட்டீல், பார்த் மகிஜா மற்றும் உமாமகேஷ் மத்தினேனி

ஆண்கள் ஏர் ரைபிள் அணி

 

7

ருத்ராங்க்ஷ் பாட்டீல் 

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (தனிநபர்)

 

8

ஷிவா நர்வால்

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பி ஸ்டல்  (தனிநபர்)

 

9

பாலக்

பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் (தனிநபர்)

 

10

சவுரப் சவுத்ரி, ஷிவா நர்வால் மற்றும் சரப்ஜோத் சிங் 

ஆண்கள் ஏர் பிஸ்டல் அணி

11

இஷா சிங், சௌரப் சவுத்ரி

10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணி

 

12

மனு பாக்கர், பாலக் மற்றும் இஷா சிங் 

 பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி

 

13

ஆர்யா போர்ஸ், ஜீனா கிட்டா மற்றும் ரமிதா

பெண்கள் ஏர் ரைபிள் அணி

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்