Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி - சென்னையில் இன்று ஆட்டம் ஆரம்பம்..!!

Saraswathi Updated:
உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி - சென்னையில் இன்று ஆட்டம் ஆரம்பம்..!!Representative Image.

உலகக் கோப்பைக்கான ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் இன்று தொடங்குகின்றன. இந்தியா, சீனா, உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 10,30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. நாள்தோறும் இரவு 8.30 மணி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இந்தத் தொடரில், இந்தியா ,ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்எக்ஸ்பிரஸ் அவென்யூ, ராயப்பேட்டை. ஸ்குவாஷ் அகடமி (ஐஎஸ்டிஏ), சேத்துப்பட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தத் தொடரில், இந்திய அணி இரண்டாவது சீட் (SEED) அணியாக களமிறங்குகிறது. இந்திய அணியில் தமிழ்நாடு வீராங்கனையும், இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜோஷ்னா சின்னப்பா, இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனை தான்வி கண்ணா, இந்தியாவின் நம்பர் ஒன் வீரர் சவுரவ் கோஷல், தமிழக வீரர் மற்றும் இந்தியாவின் இரண்டாவது நிலை வீரரான அபய் சிங் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில் , பி என இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா அணிகளும், பி-பிரிவில் இந்தியா, ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இரு பிரிவுகளாக நடத்தப்படும் இந்தப் போட்டிகள் 13, 14 ,15 ஆகிய மூன்று நாட்களில் லீக் போட்டிகளும், ஜூன்16ம் தேதி அரையிறுதி போட்டிகளும்,  17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறதுலீக் சுற்றில் ஒவ்வொரு ஒற்றையர் பிரிவு வெற்றிக்கும் தலா 2 புள்ளி, இரட்டையர் பிரிவு வெற்றிக்கு தலா 1 புள்ளி வழங்கப்படும். நாக் அவுட் சுற்றில் ஆட்டம் டிராவானால் வெற்றி பெற்ற செட்களின் அடிப்படையில் வெற்றி,தோல்வி இறுதிசெய்யப்பட்டு  அறிவிப்பு வெளியிடப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்