Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,830.54
-175.40sensex(-0.24%)
நிஃப்டி22,478.70
-23.30sensex(-0.10%)
USD
81.57
Exclusive

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு ஜூலை 4-ம் தேதி தேர்தல்…சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் எச்சரிக்கையால் நடவடிக்கை

Surya Updated:
இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு ஜூலை 4-ம் தேதி தேர்தல்…சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் எச்சரிக்கையால் நடவடிக்கைRepresentative Image.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவிக்கு ஜூலை 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷ்ண், தங்களில் 6 பேருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் எனக்குற்றம்சாட்டி, 6 மாதங்களாக வீராங்கனைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷண் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 12 ஆண்டுகளாக தலைவராக உள்ள பிரிஜ் பூஷணின் பதவிக்காலம் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்ததால், மே 7-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அன்று தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனிடையே பூஷணை கைது செய்யக்கோரி போராடியபோது, மே 28-ம் தேதி டெல்லியில் வீராங்கனைகள் கைது செய்யப்பட்டது; பதக்கத்தை ஆற்றில் வீச முயன்ற சம்பவங்களால் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அதிர்ச்சியடைந்தது. அடுத்த 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தவில்லை என்றால் அங்கீகாரத்தை ரத்து செய்யப்போவதாக எச்சரித்தது. இதையடுத்து ஜூலை 4-ல் தேர்தல் நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பிரிஜ் பூஷண் கூறியிருப்பது குறிப்பிடத்துக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்