Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,319.00
466.06sensex(0.63%)
நிஃப்டி22,567.95
165.55sensex(0.74%)
USD
81.57
Exclusive

குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்கில் போடுங்க.. பரப்பை கிளப்பிய பிரபல வீராங்கனை.. | wrestlers protest news

Nandhinipriya Ganeshan Updated:
குற்றவாளி யாராக இருந்தாலும் தூக்கில் போடுங்க.. பரப்பை கிளப்பிய பிரபல வீராங்கனை.. | wrestlers protest newsRepresentative Image.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீதான இளம் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில், அவரை கைது செய்யக்கோரி கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் நேற்று 18-வது நாளாக நீடித்துள்ளது. 

இதனிடையே இந்த விசாரணையை கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோரியும் டெல்லி கோர்ட்டில் மல்யுத்த வீராங்கனைகள் தர்ப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்த நிலவர அறிக்கையை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், இது குறித்து ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வீராங்கனை சாக்ஷிக் மாலிக் கூறுகையில், 'இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதேபோல் புகார் கூறிய 7 வீராங்கனைகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தலாம். அப்போது தான் யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பது தெரியவரும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களை தூக்கில் போடுங்கள். பெண்களின் நலனுக்காக போராடும் எங்களுக்கு அனைத்து பெண்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்