Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Viral Video : மைதானத்தில் அனைவரின் முன்னிலையிலும்.. ஹாங்காங் வீரரின் க்யூட் லவ் புரபோசல்!!

Sekar September 02, 2022 & 15:12 [IST]
#Viral Video : மைதானத்தில் அனைவரின் முன்னிலையிலும்.. ஹாங்காங் வீரரின் க்யூட் லவ் புரபோசல்!!Representative Image.

கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை மோதலில் தோல்வியடைந்தாலும், ஹாங்காங் வீரர் கிஞ்சித் ஷாவுக்கு மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. 

போட்டி முடிந்ததும் ஆல்ரவுண்டர் கிஞ்சித் ஷா தனது காதலியை துபாய் மைதானத்தில் அனைவரும் பார்க்க, புரபோஸ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

கிஞ்சித் ஷா தனது காதலியிடம் காதலை தெரிவித்தபோது, ​​கிஞ்சித் ஷாவை நோக்கி அனைத்து கேமராக்களும் திரும்பின. அவரது காதலியும் கிஞ்சித் ஷாவின் காதலை ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் அவர் புரபோஸ் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. ஹாங்காங் அணி வீரர்களும் ஜோடியை உற்சாகப்படுத்தினர்.

இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் 26 வயதான பேட்டர் கிஞ்சித் ஷா 4வது இடத்தில் வந்து 28 பந்துகளில் 30 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதே துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் தான், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரும் தனது காதலிக்கு ஸ்டேடியத்தில், அனைவரின் முன்னிலையில் புரபோஸ் செய்தார்.

இதை குறிப்பிடும் நம்ம ரசிகர்கள், காதல் திருமணம் என்றால் உடனே நமக்கு போலீஸ் ஸ்டேஷன் ஞாபகம் வருவது போல், இனி துபாய் மைதானம் என்றாலே, கிரிக்கெட் ஞாபகம் வரும் முன், வீரர்களின் லவ் புரபோசல் தான் ஞாபகம் வரும் என ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.

 

She said YES!

Kinchit Shah Proposal | Kinchit Shah Wife Name | Kinchit Shah Proposal Video | Kinchit Shah Instagram | Sports | India vs Hong Kong | T20 World Cup 2022 | Hong Kong Player | Hong Kong T20 Player Stats |


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்