Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காயமெல்லாம் போயே போச்சு.. இனி கலக்கல் தான்.. மீண்டும் களமிறங்கும் யார்க்கர் நடராஜன்!!

Sekar September 16, 2022 & 19:19 [IST]
காயமெல்லாம் போயே போச்சு.. இனி கலக்கல் தான்.. மீண்டும் களமிறங்கும் யார்க்கர் நடராஜன்!!Representative Image.

சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வரும் இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், வரும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் மீண்டும் ஆடுகளத்திற்கு திரும்ப உள்ளார். இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டிக்கான வலுவான 16 பேர் கொண்ட அணியில் இளம் வீரரை தமிழ்நாடு அணி சேர்த்துள்ளது. 

தமிழ்நாடு அணியில் மேலும் காயமடைந்த விஜய் சங்கருக்குப் பதிலாக பாபா அபராஜித் கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், வாஷிங்டன் சுந்தருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

22 வயதான பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் 2022இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஒன்பது போட்டிகளில் பங்கேற்ற நிலையில் வெளியேறினார். அதற்கு பிறகு, அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயரில் சேர்ந்தார்.

அங்கு அவர் இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் இரண்டு ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பையில் விளையாடினார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி வொர்செஸ்டர்ஷைருக்கு எதிராக பீல்டிங் செய்யும் போது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் இடம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில், அவர் விரைவில் குணமடைந்து அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழகத்திற்காக இடம்பெற உள்ளார். இதேபோல் வாஷிங்டன் சுந்தரும் காயத்தால் அவதிப்படுத்தி வந்த நிலையில், தற்போது தமிழக அணியில் மீண்டும் இணைந்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் மீண்டும் திரும்பிய நிலையில், தமிழக கேப்டன் விஜய் சங்கர் தோள்பட்டையில் காயம் காரணமாக விலகி உள்ளார். விஜய் கடைசியாக ஐபிஎல் 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக போட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். அங்கு அவர் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார் மற்றும் நான்கு போட்டிகளில் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. நடராஜன் மற்றும் விஜய் இருவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2022 போட்டியையும் தவறவிட்டனர். 

இந்நிலையில், சையத் அலி முஸ்டாக் டி20 டிராபியில், தற்போதைய சாம்பியனான தமிழ்நாடு இந்த சீசனில் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது.

தமிழ்நாடு அணி : பி அபராஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பி சாய் சுதர்சன், டி நடராஜன், எம் ஷாருக் கான், ஆர் சாய் கிஷோர், ஆர் சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம் சித்தார்த், வருண் சக்ரவர்த்தி, ஜே சுரேஷ் குமார், சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், ஆர் சிலம்பரசன், எம் அஷ்வின், ஜி அஜிதேஷ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்