Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.19,500 அறிமுகமான Jio Laptop...விலை தான் கம்மி இருக்கும் வசதியோ அதிகம்..!

Manoj Krishnamoorthi Updated:
ரூ.19,500 அறிமுகமான Jio Laptop...விலை தான் கம்மி இருக்கும் வசதியோ அதிகம்..!Representative Image.

Jio என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது மலிவு விலையில் கிடைக்கும் டேட்டா தான் மனதில் தோன்றும். இவ்வாறு குறைந்த விலையில் 4ஜி டேட்டா மற்றும் Jio போனை அளித்து வந்த jio நிறுவனம் தற்போது நாட்டில் முதல் முறையாக குறைந்த விலையில் ஒரு லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் ஜியோ அறிமுகம் செய்த லேட்பாபின் சிறப்பு அம்சங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

Jio 19500 laptop

நம்பமுடியாத 19,500 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த லேட்பாப் தான்  தற்போதைய டாக். சமீபத்தில் ஜியோ 5g சேவையை ஒவ்வொரு நகரமாக அறிமுகம் செய்து வருகிறது. 1.2 kg எடை கொண்ட ஜியோ லேப்டாப் 55.1-60 Ah பேட்டரி பொருத்தப்பட்டது.  11.6 இன்ச் HD LED Backlit Anti-glare டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது, எனவே தெளிவான பிச்சர் குவாலிட்டி இருக்கும். 

குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ள இந்த ஜியோ லேப்டாப் 2GB LPDDR4X RAM உடன் 32 GB eMMC ஸ்டோரேஜ் கொண்டது, அதேவேலையில் 665 octa core processor மூலம் இயங்கப்படுவது. இதன் ப்ளுடூத் இணைப்பு 5.2 மற்றும் 4ஜி broadband இணைப்பு நமக்கு உபயோகத்திற்கு தேவையானது ஆகும். மேலும் 1 வருட பிராண்ட் உத்தரவாதத்துடன்  அளிக்கப்படும் ஜியோ லேப்டாபின் விவரம் அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் இணையத்தளத்தில் உள்ளது.

பேசிக் RAM வசதி கொண்ட இந்த ஜியோ லேப்டாபில் டூயல் இண்டர்னல்ல் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் வசதி உள்ளது.  ஆனால் அதிகபேர் விரும்பும்  Fingerprint scanner வசதி இல்லை.  

இந்த லேப்டாப் விற்பனையில் இருந்தாலும் எல்லாரும் வாங்கும் தூரத்தில் இல்லாமல் அரசாங்க துறை மட்டும் GeM port யில் வாங்கும்படியாக உள்ளது. விரைவில் இந்த விற்பனை முறை எளிமையாக்கப்பட்டு மக்கள் வாங்கும்படி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்