Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57
Exclusive

ரிலீஸான முதல் நாளே 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கிய மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல? | Redmi 12 Series Sale

Nandhinipriya Ganeshan Updated:
ரிலீஸான முதல் நாளே 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கிய மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல? | Redmi 12 Series Sale Representative Image.

Xiaomi நிறுவனம் கடந்த வாரம்  அதன் ரெட்மி 12 சீரிஸின் கீழ் ரெட்மி 12 4ஜி (Redmi 12 4g) மற்றும் ரெட்மி 12 5ஜி (Redmi 12 5g)  என்ற இரண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே அந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் 300,000 யூனிட்களை விற்று ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இப்படி போட்டி போட்டு வாங்க இந்த போன்களில் எப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கிறது. வாங்க! தெரிந்துக்கொள்வோம்.

ரிலீஸான முதல் நாளே 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கிய மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல? | Redmi 12 Series Sale Representative Image

Redmi 12 சீரிஸ் அம்சங்கள்!

ரெட்மி 12 4ஜி மற்றும் ரெட்மி 12 5ஜி இரண்டுமே ப்ரீமியம் ஸ்மார்ட்போன் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகின்றன.  ஃபிளாக்ஷிப்-கிரேடு கிரிஸ்டல் கிளாஸ் பேக் டிசைனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு செயலியை தவிர ஒரே மாதிரியான லுக்கை கொடுக்கிறது. மலிவு விலையில் தரமான செயல்திறனை வழங்குவதால், மிட்-ரேஞ்ச் பையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாமல், இதன் சிறப்பம்சங்கள் உண்மையில் ஆச்சரியப்படும் வகையில் இருக்கின்றன.

Redmi 12 4G மற்றும் 5G இரண்டுமே 50MP ப்ரைமரி மற்றும் 2MP மேக்ரோ கேமரா சென்சார்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே FHD+ தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளன. ப்ராசஸரை பொறுத்தவரை, Redmi 12 4G ஆனது Helio G88 SoC மூலம் இயக்கப்படுகிறது, அதேசமயம் 5G பதிப்பில் Snapdragon 4 Gen 2 சிப் பொருத்தப்பட்டுள்ளது. Redmi 12 5G ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸர் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இரண்டு போன்களுமே 18W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.

ரிலீஸான முதல் நாளே 3 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை.. போட்டி போட்டு வாங்கிய மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல் இதுல? | Redmi 12 Series Sale Representative Image

கம்மி விலையும் செம்ம ஆஃபரும்!

Redmi 12 4g ஆனது 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வெளியாகியுள்ளன. அதன் விலைகள் முறையே, 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.10,499 க்கும் வாங்கலாம். Redmi 12 5g ஆனது 3 ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வெளியாகியுள்ளன. அதன் விலைகள் முறையே, 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.10,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ் ரூ.12,499 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.14,499 க்கும் வாங்கலாம்.

மேற்கண்ட சலுகை விலைகள் ஆனது Xiaomi நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளமான Mi.com, Flipkart.com, Mi Home, Mi Studio மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடெய்லர் ஷாப்களில் கிடைக்கும். இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த விலை சலுகைகளோடு பயனர்களுக்கு கூடுதல் பேங்க் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது, நீங்க ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால், Redmi 12 5g அல்லது Redmi 12 4g ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் வேரியண்ட்டின் மீது ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இதுமட்டுமல்லாமல், ரெட்மி 12 4ஜி ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட்டிற்கு ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) கிடைக்கிறது. அதேசமயம்,  Redmi 12 4g ஸ்மார்ட்போனின் 6GB வேரியண்ட் அல்லது Redmi 12 5g ஸ்மார்ட்போனின் 8GB வேரியண்ட்டை தேர்வுசெய்தால், உங்களுக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடியும் உண்டு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்