Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நோக்கியா ஸ்மார்ட்போன்...ஜஸ்ட் ரூ.8,749/-க்கு...அமேசானில் சூப்பர் ஆஃபர்!| Nokia C32 Amazon Offer

Priyanka Hochumin Updated:
நோக்கியா ஸ்மார்ட்போன்...ஜஸ்ட் ரூ.8,749/-க்கு...அமேசானில் சூப்பர் ஆஃபர்!| Nokia C32 Amazon OfferRepresentative Image.

அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு என்று நிறைய ஆஃபர் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோக்கியா மாடலுக்கு சூப்பர் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்கள், விலை, அமேசான் சலுகை விவரம் உள்ளிட்ட அனைத்து தகவலையும் பார்க்கலாம்.

Nokia C32 விவரக்குறிப்புகள்

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் HD பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஆதரவு கொண்ட 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டு இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி கேமரா செட்டப் அளிக்கப்படும். 4ஜிபி ரேம் + (3 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏச் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் பல கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது. தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும்.

அமேசான் தளத்தில் ரூ.10,499/-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா சி32 ஸ்மார்ட்போனுக்கு 17% தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த போனை ரூ.8,749/-க்கு நம்மால் வாங்க முடியும். அதோடு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்யும் போது கூடுதல் சலுகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்