Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

128ஜிபி ஸ்டோரேஜ்...6.79 இன்ச் டிஸ்பிளே...அம்சங்கள் ஆனா விலை இவ்ளோ கம்மியா?| Poco M6 Pro Price in India

Priyanka Hochumin Updated:
128ஜிபி ஸ்டோரேஜ்...6.79 இன்ச் டிஸ்பிளே...அம்சங்கள் ஆனா விலை இவ்ளோ கம்மியா?| Poco M6 Pro Price in IndiaRepresentative Image.

போகோ நிறுவனத்தின் போகோ எம் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை, முக்கிய அம்சங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.  

Poco M6 Pro விவரக்குறிப்புகள்

போகோ எம் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளே 6.79 இன்ச் full HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. அத்துடன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் கொண்டு இயங்குகிறது. கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா ஆகிய டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா செட்டப் அளிக்கப்படும். 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் என்னும் மூன்று வேரியண்ட்டில் கிடைக்கும். 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏச் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் ஃபாரஸ்டு க்ரீன் மற்றும் பவர் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.10,999/-க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.12,999/-க்கும் மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.11,999/-க்கும் விற்பனையாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்