Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

256ஜிபி ஸ்டோரேஜ்...5000mAh பேட்டரி...மற்ற விவரங்களுடன் Oppo A2X & A2M போன்! | Oppo A2X and A2M Leaked Specs Details

Priyanka Hochumin Updated:
256ஜிபி ஸ்டோரேஜ்...5000mAh பேட்டரி...மற்ற விவரங்களுடன் Oppo A2X & A2M போன்! | Oppo A2X and A2M Leaked Specs DetailsRepresentative Image.

மக்களுக்கு பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போனை தரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒப்போ நிறுவனம் புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன டெலிகாம் தளமான TENNA என்னும் வெப்சைட்டில் OPPO A2X மற்றும் A2M ஆகிய அடுத்த ஒப்போ ரிலீஸ் ஸ்மார்ட்போன்களைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Oppo A2X மற்றும் Oppo A2M விவரக்குறிப்புகள்

இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் தயாரிப்பு நிலையில் இருப்பதால் முழு விவரங்கள் தெரிய சிறிது காலமாகும். இருப்பினும் மக்கள் மத்தியில் இந்த போன்களின் அறிமுகம் பற்றிய விவரங்களை நிறுவனம் வெளியிட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் OPPO A2X மற்றும் A2M போன் 6.56 இன்ச் LCD டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு  Android 13 with ColorOS 13 on top உடன் இயங்கும் 2.2 GHz octa-core CPU சிப்செட் கொண்டு வரலாம்.

கேமராவைப் பொறுத்த வரையில், 13 மெகாபிக்சல் மெயின் கேமரா பின்புறத்திலும், 5 மெகாபிக்சல் செல்ஃபீ கேமராவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அதிவேக செயல்திறனுக்காக 5000mAh பேட்டரி அமைப்பைக் கொண்டு இருக்கலாம். இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போனும் 6GB / 8GB / 12GB ஆகிய மூன்று ரேம் வேரியண்டிலும், 128GB / 256GB எனும் இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்டிலும் வரலாம். இவை அனைத்து அம்சங்களையும் கொண்டு தான் OPPO A2X மற்றும் A2M ஸ்மார்ட்போன் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்